கராச்சி விமான விபத்து: விமானியின் அலட்சியமே காரணம்

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

இஸ்லாமாபாத்: கராச்சி விமான விபத்து நடந்ததற்கு கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தலை விமானி அலட்சியம் செய்ததே காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது.



latest tamil news



கடந்த வெள்ளியன்று, லாகூரிலிருந்து, 98 பயணியர், ஒன்பது ஊழியர்கள் என, 107 பேருடன் புறப்பட்டு சென்ற, பி.ஐ.ஏ., எனப்படும், 'பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' நிறுவன விமானம், கராச்சி விமான நிலையம் அருகே, குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 97 பேர் இறந்தனர். விபத்து தொடர்பான விசாரணையில் விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது.


latest tamil news



விபத்து நடந்த அன்று மதியம் 2.30க்கு கராச்சியில் தரையிறங்க இருந்த விமானம் 15 நாட்டிகல் மைல் தொலைவில் 7,000 அடி உயரத்தில் பற்ப்பதற்கு பதிலாக 10,000 அடி உயரத்தில் பறந்ததாக கூறப்படுகிறது. மேலும் கராச்சி விமானநிலையத்தை அடைய 10 நாட்டிகல் மைல் இருக்கும் போது 3,000 அடி உயரத்தில் பறப்பதற்கு பதிலாக 7,000 அடி உயரத்தில் பறந்துள்ளது.


latest tamil news



இந்நிலையில் உயரத்தை குறைக்கும் படி இரண்டு முறை கட்டுப்பாட்டு மையம் விமானிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையை பின்பற்றாததே விபத்து நடந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyan - Tiruchirapalli,இந்தியா
26-மே-202012:43:49 IST Report Abuse
kalyan பல நேரங்களில் விமானியின் பார்வையில் விமானத்தில் இருக்கும் உயரத்தை அளக்கும் கருவி தவறானதாக இருக்குமானால் விமானி கண்ட்ரோல் டவர் சொல்வதை நம்புவதா அல்லது காண்பதை நம்புவதா என்ற குழப்பத்திற்கு ஆளாவர் விமானியும் துணை விமானியும் சேர்ந்து வேண்டுமென்றே தவறு செய்வது மிக அரிதானது தீவிர விசாரணைக்கு பின்னரே சரியான காரணம் தெரிய வரும் அதுற்கு முன் விமானிகளை குறை கூறுவது சரியன்று
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
26-மே-202009:59:31 IST Report Abuse
Sampath Kumar பாய் பிரியாணி தின்கிற மூடியில் இருந்து இருப்பார் போல
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
26-மே-202006:53:35 IST Report Abuse
Natarajan Ramanathan விபத்துக்கு காரணம் விசாரணை முடிவில் தெரியவரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X