பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : மே 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 இதே நாளில் அன்று

மே 26, 1978

மயிலாடுதுறையில், 1925 ஜூன் 19ம் தேதி, பொன்னப்பா --- எலிசபெத் தம்பதிக்கு மகனாக பிறந்தவர், ஜெகசிற்பியன். இயற்பெயர், பாலையன்.சென்னை ஓவியக் கல்லுாரியில் ஓவியம் கற்றார். பின், சிறுகதை, நாவல்கள் எழுத துவங்கினார். பாலையா, தஞ்சை ஜெர்வாஸ், மாயவரம் உள்ளிட்ட பெயர்களில் எழுதினார். சுத்தானந்த பாரதியார், புதினம் ஒன்றில், ஷேக்ஸ்பியரை, 'செகப்ரியர்' என்றெழுதினார். அப்பெயரின் தாக்கத்தால், தன் புனைபெயரை, 'ஜெகசிற்பியன்' என மாற்றிக் கொண்டார்.

அவரின், 154 சிறுகதைகள், 12 தொகுதிகளாகவும்; இரு குறுநாவல்கள், இரு தொகுதிகளாகவும் வெளிவந்துள்ளன. இவற்றில், 30 சிறுகதைகளும், குறுநாவல்களும் ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. வானொலிக்காக, பல நாடகங்களையும் எழுதியுள்ளார். கொஞ்சும் சலங்கை படத்திற்கு உரையாடலை எழுதியுள்ளார்.
இவரின், 'ஜீவகீதம்' புதினம், 13 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. 1978 மே,
26ம் தேதி இறந்தார்.எழுத்தாளர் ஜெகசிற்பியன் காலமான தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
26-மே-202008:27:26 IST Report Abuse
Bhaskaran அவரது பத்தினிக்கோட்டம் ஆலவாயழகன் நாயகி நற்சோணை திருச்சிற்றம்பலம் மாரம்பாவை போன்ற சரித்திர நாவல்கள் மிக அருமையாக இருக்கும் இந்தகாலத்தலைமுறையினர் படித்து மகிழலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X