கேரளாவில் புதிதாக 49 பேருக்கு கொரோனா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரளாவில் புதிதாக 49 பேருக்கு கொரோனா

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020
Share

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



இதையடுத்து மாநிலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 896 ஆக அதிகரித்துள்ளது. இதில் 359 பேர் சிகிச்சையில் உள்ளனர். 532 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்ததாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு கேரளாவில் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்

புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 18 பேர் வெளிநாட்டிலிருந்தும், 25 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்துள்ளனர் மேலும் 6 பேர் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news



புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 49 பேர்களில் 17 பேர் மகாராஷ்டிராவிலிருந்தும்,4 பேர் தமிழகத்திலிருந்தும் இரண்டு பேர் டில்லியிலிருந்தும் மேலும் 2 பேர் கர்நாடகத்திலிருந்தும் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X