பொது செய்தி

இந்தியா

முதல்நாளில் 2.4 லட்சம் திருப்பதி லட்டுகள் விற்பனை

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

ஆந்திராவில் திருப்பதி ஏழுமலையானின் லட்டு பிரசாத விற்பனை துவங்கிய முதல்நாளான இன்று, 2.4 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. எனவே பக்தர்களின் கோரிக்கையை அடுத்து ரூ.50 மதிப்புள்ள ஒரு லட்டு பிரசாதத்தின் விலையை பாதியாக குறைத்து ரூ.25க்கு விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ஆந்திரா முழுவதும் குண்டூர் தவிரத்து 12 மாவட்ட தலைநகரங்களில் இன்று லட்டு பிரசாத விற்பனையை துவங்கியது. குண்டூருக்கான பங்கு லட்டு விற்பனை விஜயவாடாவுக்கு மாற்றப்பட்டது.


latest tamil news



கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் அந்தந்த மாவட்ட அதிகாரிகளின் முன்னிலையில், ஆந்திர மாநிலம் முழுதும் உள்ள மாவட்ட மையங்கள், தேவஸ்தான கல்யாண மண்டபங்களில் லட்டு பிரசாத விற்பனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பிரசாதத்தை வாங்கி சென்றனர். விற்பனை துவங்கிய சில மணி நேரங்களிலே அனைத்து லட்டு பிரசாதங்களும் விற்று தீர்ந்தன.
மேலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதத்தை அனுப்புவதற்காக, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநில அரசுகளின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
26-மே-202007:33:04 IST Report Abuse
SAPERE AUDE திருப்பதி தேவஸ்தானம் மிகவும் வசதியும் நிறைய சொத்துக்கள் உள்ள தேவஸ்தானம். அவர்கள் இப்படி வியாபாரத்தில் இறங்குவது அவசியமில்லை.தவிர பக்தர்கள் அளித்த சொத்துகளை விற்பனை செய்து பணம் பண்ணும் முயற்சியை உடனே கைவிட வேண்டும். இது மிகவும் தவறான ஒரு முயற்சி.(முதல் மந்திரி இதை உடனே கைவிட வேண்டி உத்தரவு இட்டு இருப்பது நல்ல செய்தி)
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
26-மே-202006:43:45 IST Report Abuse
s t rajan லட்டு விற்பது இருக்கட்டும். ஏழுமலையானின் சொத்துக்களின் சிலவற்றை அந்த மாநில அரசு விற்க முயற்சிப்பதாக கேள்விப்படுகிறோம். மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, கோயில் விவகாரத்தில ஜெகன் அரசு எந்தக் குளறுபடியும செய்யாமல் கோவில் உடைமைகள, அவைகள் எங்கிருந்தாலும், பாதுகாக்க வேண்டும்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-மே-202003:34:18 IST Report Abuse
J.V. Iyer சர்க்கரை வியாதிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X