மஹா.,வில் இன்று 2,436 பேருக்கு கொரோனா; மும்பையில் மட்டும் 1430

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Maharashtra, Mumbai, corona virus, covid 19, மும்பை

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (மே 25) புதிதாக 2,436 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்பு 52 ஆயிரத்தை கடந்தது. அம்மாநில தலைநகர் மும்பையில் பாதிப்பு ஆயிரத்தை கடந்தது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க, மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு தளர்வுகளுடன் இருக்கும் என அறிவித்த மத்திய அரசு, தளர்வுகள் குறித்த விவரங்களையும் வெளியிட்டுள்ளது.


latest tamil news



நாட்டில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. அங்கு இன்று புதிதாக 2,436 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,667 ஆக அதிகரித்தது. இன்று மேலும் 60 பேர் பலியாகினர். இதனையடுத்து மொத்த பலி 1,695 ஆக உயர்ந்தது. இன்று ஒரே நாளில் 1,186 பேர் குணமாகி வீடு திரும்பியதையடுத்து, குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 15,786 ஆக அதிகரித்தது. இதனை மஹாராஷ்டிர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மும்பையில் மட்டும் இன்று புதிதாக 1,430 பேருக்கு கொரோனா உறுதியானது. 38 பேர் இன்று பலியாயினர். இதனையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 31,789 ஆகவும், மொத்த பலி 1026 ஆகவும் உயர்ந்தது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
26-மே-202001:21:36 IST Report Abuse
PANDA PANDI மகாராஷ்டிரா என்றால் இந்த இரண்டு குமரிகள் படம் தான் எப்பொழுதும். நாட்டாமை படத்தை மாற்றவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X