சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கொச்சின் வந்த 103 பேர்

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

கொச்சின் : வெளி நாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து 103 பேர் கொச்சினுக்கும், 146 பேர் கத்தார் நாட்டின் தோஹாவில் இருந்து கயாவிற்கும் வந்தனர்.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் பரவி அச்சுறுத்தி வருகிறது. நோய் பாதிப்புகள் தொடர்பான அச்சுறுத்தல்களால் வெளி நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் தாங்கள் சொந்த ஊர் திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூதரகம் மூலமாகவும், பிற வழிகள் மூலமாகவும் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் அரசு, வெளிநாடு வாழ் இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா போன்ற விமான நிறுவனங்கள் மூலமும் கடற்படை மூலமாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.


latest tamil news



தொடர்ந்து, இதற்காக வந்தே பாரத் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அரசு களமிறங்கியது. இதன் கீழ் ஏர்-இந்தியா விமானம் மூலமாக அமெரிக்காவிலிருந்து நாட்டு மக்களை திரும்ப அழைத்து வருவதற்காக ஏழு விமானங்களை இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் டி.சி, சிகாகோ மற்றும் நியூயார்க் ஆகிய நாடுகளிலிருந்து விமானங்கள் பயணிகளுக்கான சேவையில் ஈடுபடும் என கூறப்படுகிறது. இரண்டாம் கட்டமாக இந்த 7 விமானங்களில் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து 2, சிகாகோவில் இருந்து 2, நியூயார்க்கில் இருந்து 2 மற்றும் வாஷிங்டனில் இருந்து 1 என அறிவிக்கப்பட்டது.


latest tamil news



மே.,6 முதல் 30,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஏர் இந்தியா மூலம் நாடு திரும்பினர். இந்நிலையில் இன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து 103 பேர் கேரள மாநிலம் கொச்சின் வந்தனர். இந்த விமான பயணத்தில் 4 கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் உட்பட பலரும் பயணம் செய்து நாடு திரும்பினர். இதை தொடர்ந்து, கத்தார் நாட்டின் தோஹாவில் இருந்து ஏர் இந்தியா விமானங்களின் மூலம் 146 பேர் இன்று காலையில் பீஹார் மாநிலத்தின் கயாவை சென்றடைந்தனர். உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு விமானம் தோஹாவில் இருந்து கிள்பியதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இந்திய நாட்டினரை வீட்டிற்கு அழைத்து வருவதற்கான இந்திய அரசாங்கத்தின் இரண்டாம் கட்ட 'வந்தே பாரத்' பணியின் ஒரு பகுதியாக இது தோஹாவிலிருந்து ஒன்பதாவது விமானமாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
26-மே-202007:55:48 IST Report Abuse
SAPERE AUDE வசதிஉள்ளவர்கள் எந்த நாட்டிலும் தங்கலாம். தாய்நாட்டிற்கு திரும்பவேண்டி யாரும் அழைக்க வில்லை.
Rate this:
Cancel
sathiya narayanan - Dallas,யூ.எஸ்.ஏ
26-மே-202001:51:42 IST Report Abuse
sathiya narayanan எனக்கு இப்பொழுது இந்தியாவை விட அமெரிக்க பாதுகாப்பாக தோன்றுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X