தெலுங்கானாவில் ஒரே நாளில் மேலும் 41 பேருக்கு கொரோனா

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020
Share
Advertisement

ஐதராபாத் : கொரோனா வைரசின் பாதிப்புகளால் தெலுங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த முதல்வர் சந்திரசேகர ராவ் பல்வேறு கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) மேலும் 41 பேர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டனர். இதனால் மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்புகளின்எண்ணிக்கை 1,854 ஆக அதிகரித்தது. மேலும் ஒரே நாளில் 4 பேர் பலியாகினர். இதையொட்டி, மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்தது.


latest tamil news



தெலுங்கானாவில் நோய் தொற்றில் இருந்து மேலும் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,092 ஆக இருந்தது. அதன் மீட்பு சதவீதம் 59 ஆக அதிகரித்தது. புதிதாக பாதிக்கப் பட்டவர்களில் 23 பேர் ஐதராபாத் நகர பகுதியிலும், 1 நபர் ரங்காரெட்டியிலும் பதிவாகியது. அத்துடன் 11 பேர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் எனவும், 6 பேர் பிற நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என தெரிய வந்துள்ளது. நோய் பாதிப்புக்கு 709 பேர் சிகிச்சையில் உள்ளனர். தெலுங்கானாவின் 25 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக எந்தவொரு பாதிப்புகளும் பதிவாகவில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X