'கால்வாய் துார் வாரும் பணியை முழுமையாக நிறைவேற்றுங்க!'

Added : மே 26, 2020 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை : 'காவிரி டெல்டா மாவட்டங்களில், கால்வாய் துார் வாரும் பணிகளை, போர்க்கால அடிப்படையில், முழுமையாக நிறைவேற்ற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை:மேட்டூர் அணை, ஜூன், 12ல் திறக்கப்படும் என, அறிவித்ததுடன், இப்போது துார் வாரும் பணிகளையும், அ.தி.மு.க., அரசு அறிவித்துஉள்ளது. அணை திறக்க, இன்னும், 18 நாட்களே உள்ள நிலையில், அதற்குள் காவிரி
 'கால்வாய் துார் வாரும் பணியை  முழுமையாக நிறைவேற்றுங்க!'

சென்னை : 'காவிரி டெல்டா மாவட்டங்களில், கால்வாய் துார் வாரும் பணிகளை, போர்க்கால அடிப்படையில், முழுமையாக நிறைவேற்ற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:மேட்டூர் அணை, ஜூன், 12ல் திறக்கப்படும் என, அறிவித்ததுடன், இப்போது துார் வாரும் பணிகளையும், அ.தி.மு.க., அரசு அறிவித்துஉள்ளது. அணை திறக்க, இன்னும், 18 நாட்களே உள்ள நிலையில், அதற்குள் காவிரி டெல்டாவின், ஏழு மாவட்டங்களில் உள்ள, கால்வாய்கள் அனைத்தையும் துார் வாரி விடுவார்களா...மேட்டூரில் திறக்கப்படும் நீர் கடைமடை பகுதியை சென்றடையுமா என்பதெல்லாம், மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. அணையிலிருந்து வரும் காவிரி நீரும், விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்குமா என்பது, பதில் தெரியாத புதிராகவே, இப்போது வரை இருக்கிறது.

ஆகவே, காவிரி டெல்டா மாவட்டங்களில், கால்வாய் துார்வாரும் பணிகளை, போர்க்கால அடிப்படையில், முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார். நிவாரண உதவி சென்னை, சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், 300 கல்லுாரி மாணவியர், 75 அர்ச்சகர்கள், 25 துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி, உதவித்தொகை உள்ளிட்ட நிவாரண உதவிகளை, ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., - தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
26-மே-202020:35:03 IST Report Abuse
RajanRajan ஏம்பா இந்த தபா உங்க சுடலை & கோ யாருமே இஸ்லாமிய சகோதரர்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள் சொல்ல வில்லையே. ஏன் அவிங்க தியாகத்தை அவிங்களுக்காக கஞ்சி காய்ச்சி அடிச்ச கூத்துக்களை நீங்க மறந்து விட்டீர்களா என்று நினைக்க தோன்றுகிறது.
Rate this:
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
26-மே-202018:09:47 IST Report Abuse
mrsethuraman  இந்த நூறு நாள் வேலை திட்டத்தில் இம்மாதிரி பணிகளை செய்யலாமே ?
Rate this:
Cancel
S....lai - CIT ,இந்தியா
26-மே-202016:08:59 IST Report Abuse
S....lai இவர் என்றும் இப்படித்தான் உருப்படியாக எதையும் சொல்லமாட்டார் அதுதான் அன்னவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அவர் முரோசொலி தலைவர் அல்லவா........ஹி ஹி ஹி ஹி ஹி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X