அட, அநியாயமே, கோவையிலுமா இப்படி?| Dinamalar

அட, அநியாயமே, கோவையிலுமா இப்படி?

Added : மே 26, 2020
Share
அதிகாலையிலேயே எழுந்து, ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டச் சாலையில், சித்ராவும், மித்ராவும் 'வாக்கிங்' செல்ல ஆரம்பித்தனர்.ஆங்காங்கே சாலை குண்டும் குழியுமாக இருப்பதை பார்த்த மித்ரா, ''அக்கா, 'ஸ்மார்ட் சிட்டி' ஸ்கீமில், மாடல் ரோடா மாத்தப்போறதா சொன்னாங்களே. 'கொரோனா' பிரச்னையில, கெடப்புல போட்டுட்டாங்களா,'' என, கேட்டாள்.''மித்து, இன்னும் ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோட்டுலேயே
 அட, அநியாயமே, கோவையிலுமா இப்படி?

அதிகாலையிலேயே எழுந்து, ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டச் சாலையில், சித்ராவும், மித்ராவும் 'வாக்கிங்' செல்ல ஆரம்பித்தனர்.ஆங்காங்கே சாலை குண்டும் குழியுமாக இருப்பதை பார்த்த மித்ரா, ''அக்கா, 'ஸ்மார்ட் சிட்டி' ஸ்கீமில், மாடல் ரோடா மாத்தப்போறதா சொன்னாங்களே. 'கொரோனா' பிரச்னையில, கெடப்புல போட்டுட்டாங்களா,'' என, கேட்டாள்.''மித்து, இன்னும் ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோட்டுலேயே வேலை முடிச்சபாடில்லை. அடுத்ததா டி.வி., சாமி ரோட்டுல முடிஞ்சாதான், ரேஸ்கோர்ஸ்க்கு வருவாங்க. இல்லேன்னா கைவிட்டுருவாங்கன்னு நினைக்கிறேன்,''''கார்ப்பரேஷன்ல எப்பவுமே அப்படித்தானே. பி.ஆர்.ஓ.,வை திடுதிப்புன்னு விடுவிச்சிட்டாங்களே, ஏதாச்சும் காரணம் இருக்கா, விசாரிச்சீங்களா''''அவருடைய பணித்திறன், உயரதிகாரிகளுக்கு திருப்திகரமா இல்லாம இருந்திருக்கு. திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு, கடந்த ஜன., மாசமே, செய்தி - மக்கள் தொடர்பு துறை இயக்குனருக்கு கடிதம் எழுதியிருக்காங்க. துறை ரீதியா விசாரிச்ச அதிகாரிகள், கொஞ்ச நாளைக்கு, மருத்துவ விடுப்பில் அனுப்புனாங்க. இப்ப, எங்களது துறைக்கு இவரது சேவை, தேவையில்லைங்கிற அர்த்தத்துல விடுவிச்சிட்டாங்க,''.''புதுசா மூணு அதிகாரிகள் வந்திருக்கறதாவும் கேள்விப்பட்டேனே,''''அதுவா, காங்கிரஸ் ஆட்சிக்காலத்துல, ஜே.என்.என்.யு.ஆர்.எம்.,னு ஸ்கீம் கொண்டு வந்தாங்க. அப்ப, 56 'போஸ்ட்டிங்' உருவாக்குனாங்க. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்ததும், அந்த திட்டத்தை கைவிட்டு, 'ஸ்மார்ட் சிட்டி'ன்னு பெயரை மாத்திட்டாங்க. ஆனா, பதவிக்காக, பழைய 'போஸ்ட்டிங்'கை கலைக்காம, தொடர்ந்து அதிகாரிகளை நியமிச்சிட்டு இருக்காங்க.''இதுக்கு முன்னால இருந்த கமிஷனர், கார்ப்பரேஷன் செலவை குறைக்கிறதுக்காக, ரெண்டு அதிகாரிகளை அவுங்கவுங்க துறைக்கு திருப்பி அனுப்புனாரு. இப்ப, சூலுார், வெள்ளலுார், நாகர்கோவில்ல இருந்து, மூணு அதிகாரிகளை நியமிச்சிருக்காங்க. இவுங்களாவது, வேலை செய்றாங்களான்னு பார்ப்போம்,''''அதிருக்கட்டும், சவுத்துல இதுக்கு முன்னாடி தாசில்தாரா இருந்தவரு, லட்சக்கணக்குல கரன்சி வாங்கிட்டு, பிரபல கல்லுாரியில 'டிரஸ்டி'யா இருந்தவருக்கு, கிட்னி அறுவை சிகிச்சை செய்றதுக்கு, 'உறவு முறை சான்று' கொடுத்திருக்காராம். இதுல, கிட்னி கொடுத்தவரு, மதுரையை சேர்ந்தவராம்.''வழக்கமா, ரத்த சொந்தமா இருந்தா மட்டுமே, கிட்னி அறுவை செய்வாங்க. இல்லேன்னா, மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம் செஞ்சாங்கன்னா, மாற்று அறுவை சிகிச்சை செய்வாங்க. ரத்த உறவு இல்லாதவருக்கு, 'குடும்ப நண்பர்'னு சொல்லி, சவுத் தாலுகா ஆபீசுல சர்ட்டிபிகேட் கொடுத்திருக்காங்களாம்,''''அடப்பாவமே, லஞ்சம் கொடுத்தா, அரசாங்க அலுவலகத்துல என்ன வேணும்னாலும் செய்வாங்க போலிருக்கே,'' என, நொந்து கொண்டாள் சித்ரா.இருவரும் பேசிக்கொண்டே, ஒரு 'ரவுண்ட்' வந்திருந்தனர். இரண்டாவது சுற்றை துவக்கிய மித்ரா, ''குனியமுத்துார் ஸ்டேஷன்ல வேலை பார்த்த மூணு போலீஸ்காரங்களை, 'கன்ட்ரோல் ரூமுக்கு' மாத்திட்டாங்களே, ஏதாச்சும் தப்பு பண்ணிட்டாங்களா,'' என, கிளறினாள்.''அதுவா, நஞ்சுண்டாபுரம் தயிர் இட்டேரி ஏரியாவுல, ரம்ஜான் பண்டிகையையொட்டி, தி.மு.க., சார்புல வீட்டுக்கு வீடு 'பக்கெட் பிரியாணி' சப்ளை செஞ்சிருக்காங்க. ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கு 'லேட்'டாதான் தகவல் போயிருக்கு. முன்கூட்டியே தகவல் சொல்லாததுக்காக, பலிகடா ஆக்கிட்டதா, சொல்றாங்க,''''அக்கா, உளவுத்துறை அதிகாரிகளும் அப்படித்தான் இருக்காங்க. ஏன்னா, காவல்துறையில உளவுத்துறை, எஸ்.பி.சி.ஐ.டி., - ஸ்பெஷல் பிராஞ்ச், சிறப்பு நுண்ணறிவு பிரிவு, சிறப்பு நுண்ணறிவு டீம்னு ஏகப்பட்ட பிரிவு இருக்கு. இவுங்க போலீஸ் யூனிபார்ம் போட மாட்டாங்க. சிட்டியை கண்காணிச்சு, அரசுக்கு ரகசிய அறிக்கை தாக்கல் செய்வாங்க. கொஞ்ச நாளாவே, இந்த துறையை சேர்ந்தவங்க எல்லோருமே, ஒரு இடத்துல சங்கமமாகி, ஒரே விதமான ஸ்டேட்மென்ட்டை அரசுக்கு அனுப்புறாங்களாம்,'''வாக்கிங்'கை முடித்து விட்டு, வீட்டுக்கு திரும்பிய மித்ரா, ''ஆளுங்கட்சியில இருக்கிற 'மாஜி' கவுன்சிலர் ஒருத்தரு மேல, அடுக்கடுக்கா குற்றம் சுமத்தி, மேலிடத்துக்கு புகார் போயிருக்காமே,'' என, கேட்டாள்.''யெஸ் மித்து, உண்மைதான்! 'உப்பு' பெயரை அடைமொழியா வச்சிருக்கிறவரு மேல, கட்டப்பஞ்சாயத்து செய்றது, ரேஷன் கடைக்காரங்களை மிரட்டுறதுன்னு ஏகப்பட்ட புகார் பறந்திருக்கு. கார்ப்பரேஷனுக்கு சொந்தமான 'ரிசர்வ் சைட்'டை காண்பிச்சு, புதுசா கட்டிட்டு இருக்குற அபார்ட்மென்ட்டுல ஒரு வீட்டுக்கு, பேரம் பேசி, பாதிக்கு பாதி, 'ரேட்'டை குறைச்சிருக்கிறதா ஒரு தகவல் பரவிட்டு இருக்கு. இந்த லே-அவுட் வரைபடத்தை எதிர்க்கட்சி தரப்பு தேடிட்டு இருக்கு''''கொஞ்ச நாளைக்கு முன்னாடி, நிவாரணம் கொடுக்கிறேன்ங்கிற பேருல, ரேஷன் அரிசி கொடுத்ததால, ஏரியாக்காரங்க அர்ச்சனை செஞ்சாங்கள்ல, அவருதானே,'' என, மித்ரா கேட்க, ''யெஸ்,'' என, தலையை ஆட்டிய சித்ரா, இஞ்சி டீ கோப்பையை நீட்டினாள்.அதை வாங்கி உறிஞ்சிய மித்ரா, ''ரூரல் லிமிட்டுல திருடன் - போலீஸ் விளையாட்டு நடக்குறதா சொன்னாங்க, உண்மைதானா,''''உண்மைதானாம்! கொஞ்ச நாளைக்கு முன்னாடி, 'லாட்டரி பிரதர்' வீட்டில் திருட்டு நடந்துச்சே. இதுக்கு, சென்னையில இருந்து திருட்டு கும்பலை, ஸ்பெஷல் டீம் போலீஸ்காரங்கதான் வரவழைச்சு, 'ஸ்கெட்ச்' போட்டு கொடுத்திருக்கிறதா, லோக்கல் போலீஸ்காரங்க பேசிக்கிறாங்க,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள்.அவளை பின்தொடர்ந்த மித்ரா, ''சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே இருக்குற லாட்ஜ்ல, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஒரு கும்பல் தாக்குதல் நடத்துச்சுல்ல. கல்லுாரி மாணவியர் பலரையும் 'பேஸ்புக்', 'வாட்ஸ்ஆப்' மூலமா நண்பர்களாக்கி, பணத்தாசை காட்டி, விபசார வலையில சிக்க வச்சிட்டாங்களாம். தீவிரமா விசாரிச்சா, பொள்ளாச்சி சம்பவம் போல் விஷயம் பூதாகரமாகும்னு சொல்றாங்க. இந்த விஷயத்துல சென்னை லேடிக்கும், தொடர்பிருக்கறதா போலீஸ்காரங்க சொல்றாங்க,'' என்றாள்.பேசிக்கொண்டே, வெஜிடபிள் பிரியாணி செய்வதற்கு தயாரானாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X