பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு நீட்டிப்பா; விலக்கா? முதல்வர் இன்று ஆலோசனை!

Updated : மே 26, 2020 | Added : மே 26, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
tamil nadu, tamil nadu cm, tn news, coronavirus, tn coronavirus, covid 19,
ஊரடங்கு, நீட்டிப்பா; விலக்கா?, முதல்வர், இன்று, ஆலோசனை!

சென்னை,: ஊரடங்கை தளர்த்துவது குறித்து, மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர், இ.பி.எஸ்., இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.தமிழகத்தில், நான்காம் கட்ட ஊரடங்கு, வரும், 31ல், நிறைவடைய உள்ளது. தற்போது, ஊரடங்கு அமலில் இருந்தாலும், பல்வேறு தளர்வுகளை, அரசு அறிவித்து உள்ளது.சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில், ஆட்டோக்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



சலுான்கள் மற்றும் அழகு நிலையங்கள் உட்பட, அனைத்து கடைகளும் திறக்க அனுமதி தரப்பட்டு உள்ளது.போக்குவரத்துக்கு பஸ்கள் இயக்கப்படாததால், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பாமல் உள்ளது. ஜூன், 1ல், ஊரடங்கு முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.ஆனால், சென்னை உட்பட, சில மாவட்டங்களில், கொரோனா நோய் பரவல் அதிகரித்தபடி உள்ளது.

எனவே, ஊரடங்கு முழுமையாக விலக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என, கூறப்படுகிறது.ஊரடங்கை தளர்த்தலாமா அல்லது நீடிக்க வேண்டுமா என்பது குறித்து, தலைமை செயலகத்தில், இன்று காலை, 11:00 மணிக்கு, மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்த உள்ளார்.மருத்துவ குழுவினர் பரிந்துரைக்கேற்ப, அடுத்த கட்ட நடவடிக்கைகளை, அரசு மேற்கொள்ளும்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S BASKAR - coimbatore,இந்தியா
26-மே-202012:47:42 IST Report Abuse
S BASKAR இதுவரை இந்த மருத்துவ குழுவின் ஆலோசனையை கேட்டு நடந்து கொரோனா கூடிக்கிட்டே போனதுதான் மிச்சம் . உருப்படியா எதாவது செய்யுங்க .
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
26-மே-202011:46:11 IST Report Abuse
 Sri,India மீண்டும் மாலை ஐந்து மணி வரை மட்டுமே கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் .இரவு ஏழு மணி வரை கடைகளை திறக்க வைத்து கொரோனவை பரப்ப வேண்டாமே?? டாஸ்மாக் கடை மூடப்படுமா??
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
26-மே-202010:18:12 IST Report Abuse
தமிழ்வேள் ஊரடங்கு நீட்டிப்பு தேவையற்ற ஒன்று பொது போக்குவரத்து துவங்கப்படவேண்டும் ...ஆஸ்துமா டிபி அம்மை போல இதுவும் ஒரு நோய் அவ்வளவே ...நோய் அறிகுறி தெரிந்தவன் மருத்துவமனைக்கு வருவான் ஒரு சிலருக்காக ஒரு மாநிலத்தின் வாழ்வு பொருளாதாரத்தை அழிப்பது முடக்குவது மதியற்ற செயல் ...டாஸ்மாக் திறந்து வருமானம் பார்க்கும் அரசுக்கு, டாஸ்மாக்கால் கொரோனா பரவுவது பற்றி புரிதல் இல்லை போலும் ...டாஸ்மாக் வியாபாரம் குறைந்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன ..பிழைக்க வழியில்லை, சம்பாதிக்க வழியில்லை என்னும்போது டாஸ்மாக்குக்கு மட்டும் எவன் வரப்போகிறான்? ஊரடங்கு இனிமேலும் தேவையற்றது ..இயல்பு வாழ்க்கை திரும்ப தேவையானவற்றை செய்யவேண்டும் பொது போக்குவரத்துக்கு இனிமேலும் தடை கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X