மேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு; தொடரும் போராட்டம்

Updated : மே 26, 2020 | Added : மே 26, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், 'அம்பான்' புயலுக்குப் பின், பல்வேறு பகுதிகளிலும், ஐந்தாவது நாளாக, மின்சாரம் மற்றும் குடிநீர் பிரச்னைகள் சீர் செய்யப்படாததை அடுத்து, மக்கள் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர்.மின்கம்பங்கள் சேதம்:கடந்த, 20ம் தேதி, மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே, அம்பான் புயல், கரையை கடந்தது. மேற்கு வங்கத்தில், எட்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில்,
West Bengal, amphan, cyclone, அம்பான், புயல்

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், 'அம்பான்' புயலுக்குப் பின், பல்வேறு பகுதிகளிலும், ஐந்தாவது நாளாக, மின்சாரம் மற்றும் குடிநீர் பிரச்னைகள் சீர் செய்யப்படாததை அடுத்து, மக்கள் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர்.


மின்கம்பங்கள் சேதம்:


கடந்த, 20ம் தேதி, மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே, அம்பான் புயல், கரையை கடந்தது. மேற்கு வங்கத்தில், எட்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில், சாலைகள் கடும் சேதம் அடைந்தன. ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள், தொலை தொடர்பு கோபுரங்கள் சரிந்தன. இதனால், மாநிலம் முழுதும் இருளில் மூழ்கி, தொலைதொடர்பு வசதிகளும் சேதமடைந்தன. இந்த கொடூர புயலுக்கு, 86 பேர் பலியாகினர்.

மேற்கு வங்கத்தில் ஆறு கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில முதல்வரின் கோரிக்கையை அடுத்து, 23 முதல், மீட்பு பணிகளை, ராணுவ வீரர்களும் செய்து வருகின்றனர்.


latest tamil newsமக்கள் இருளில் தவிப்பு:


இந்நிலையில், மாநிலத்தின், பல்வேறு பகுதிகளிலும், மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகள் சீரடையாததை அடுத்து, மக்கள் ஐந்தாவது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மற்றும் தெற்கு பரகனாஸ், கிழக்கு மித்னாபூர் மற்றும் கோல்கட்டா நகரின் பல பகுதிகளில், மின்சார இணைப்பு கொடுக்கப்படாததால், தகவல் தொடர்பின்றி, ஐந்தாவது நாளாக, மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.

குடிநீர், 'கேன்'களின் விலை, கடுமையாக உயர்த்தப்பட்டு வருவதை கண்டித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள, 'சால்ட் லேக்' பகுதியில், சாலையில் விழுந்து கிடந்த மரங்கள் அகற்றப்படாததை அடுத்து, பா.ஜ., மாநில தலைவர் திலீப் கோஷ், தொண்டர்களுடன் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

அம்பான் சீற்றத்திற்கு, விவசாய நிலங்கள் கடுமையாக சேதம் அடைந்து உள்ளன. வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி மாவட்டங்களில், 90 சதவீத விவசாய நிலங்கள், தண்ணீரில் மூழ்கின. இதையடுத்து மேற்கு வங்கத்தில், உணவு பொருட்களின் விலை, கடுமையாக உயர்ந்து உள்ளன.

காய்கறி மற்றும் பழ வகைகள், வரத்து குறைந்துள்ளதால், அவை, 30 சதவீதம் வரை, விலை உயர்ந்துள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கறிக்கோழி விற்பனையாளர்கள், அதன் விலையை உயர்த்தி உள்ளனர். மேற்கு வங்கத்தில், கறிக்கோழி, கிலோ, 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
27-மே-202006:26:41 IST Report Abuse
B.s. Pillai Orissa and WB are usually affected by storm and excessive rains almost every year. Orissa was very badly affected last time and it learnt its lesson and was well prepared and it drove its administrative machinery as per plans and this time the damage is under total control. The no of dead is minimum and the poor were shifted in advance to safe locations with food and water arrangemnt. Orissa C.M. Biju Patnaik did exemplary work. The same can not be said with Mam(a)ta madam.
Rate this:
Cancel
ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி ஆடிய ஆட்டமென்ன? டங்.... பேசிய வார்த்தை என்ன டங்.... சாரதா ஊழல் என்ன டங்...... அஹங்காரம் கோபம் என்ன டங்..... ஆம்பன் புயலினால் பாடம் படித்ததென்ன?..... டக் டங்... மாநிலம் வரை அதிகாரம்.... மத்திய அரசுக்கு மரியாதை.... பிரதமர் பதவிக்கு கெளரவம்..... கடைசியில் மம்தா மண்ணை கவ்வுவார்....
Rate this:
kumar - ahmedabad,இந்தியா
26-மே-202019:02:14 IST Report Abuse
kumarfilthy guy. you are cruel mined....
Rate this:
Cancel
26-மே-202014:26:02 IST Report Abuse
kulandhai Kannan ராகுல், ஸ்டாலின் நிலைப்பாடு என்ன??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X