காஷ்மீரில் கைவைத்தால் அவ்வளவு தான்: பாக்., ராணுவ தளபதி கொக்கரிப்பு

Updated : மே 26, 2020 | Added : மே 26, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement

இஸ்லாமாபாத்: ''காஷ்மீர், சர்ச்சைக்குரிய பகுதி. அதில், இந்திய அரசு, ஏதாவது தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், பாக்., ராணுவம் கடுமையான பதிலடி கொடுக்கும்,'' என, பாக்., ராணுவ தளபதி கமார் ஜாவேத் பாஜ்வா, மத்திய அரசை சீண்டியுள்ளார்.



latest tamil news



ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராணுவ தளபதி கமார் ஜாவேத் பாஜ்வா, எல்லை பகுதியில் உள்ள ராணுவ வீரர்களை சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார். பின், ராணுவ வீரர்களிடையே அவர் பேசியதாவது:காஷ்மீர், சர்ச்சைக்குஉரிய பகுதி. அதில், இந்திய அரசு, ராணுவ ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ ஏதாவது மாற்றம் செய்ய நினைத்தால், பாக்., ராணுவம் கடுமையான பதிலடி கொடுக்கும். தெற்காசிய அளவில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். எந்தவித அச்சுறுத்தலையும் சந்தித்து, அதை முறியடிக்க பாக்., ராணுவம் தயாராக உள்ளது. இந்திய எல்லை பகுதியில் இருந்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால், அதை முறியடிக்கவும், பதிலடி தரவும் பாக்., வீரர்கள் முழு அளவில் தயாராக உள்ளனர். இவ்வாறு, அவர் பேசினார்.


latest tamil news



பாக்., வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறியதாவது:பாகிஸ்தான், எப்போதும் அமைதியான சூழலையே விரும்புகிறது. அதற்காக, இது, பாகிஸ்தானின் பலவீனம் என, யாரும் நினைத்து விடக் கூடாது. பாகிஸ்தானுக்கு எதிராக, இந்திய ராணுவம், எதாவது தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், நாங்கள் அதை வேடிக்கை பார்க்க மாட்டோம்.

கடுமையான பதிலடி கொடுப்போம். காஷ்மீரில், மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. இது குறித்து, ஐ.நா., மற்றும் முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பிடம் வலியுறுத்த திட்டமிட்டுஉள்ளோம். பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா, பொய் பிரசாரம் செய்து வருவதையும், இந்த அமைப்பிடம் வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுடலைகாண் - சென்னை,இந்தியா
26-மே-202019:39:24 IST Report Abuse
சுடலைகாண் அமைதி அமைதி நாங்க விட்ருவோமா உள்நாட்டுல இருந்த தினமும் ஒரு போராட்டம் செஞ்சு மோடியை உங்க பக்கம் திரும்புமா பார்த்துக்குவோம். இப்ப இந்த கொரோனால கொஞ்சம் ஒரு மாதிரியா போய்ட்டிருக்க நாங்க சீக்கிரம் ஆரம்பிச்சுருவோம் கவலைப்படாதீங்க. அந்த பிரியாணி பொட்டலத்தை marandhuratheenga
Rate this:
Cancel
சுடலைகாண் - சென்னை,இந்தியா
26-மே-202017:43:58 IST Report Abuse
சுடலைகாண் அமைதி அமைதி நாங்க விட்ருவோமா உள்நாட்டுல இருந்த தினமும் ஒரு போராட்டம் செஞ்சு மோடியை உங்க பக்கம் திரும்புமா பார்த்துக்குவோம் . இப்ப இந்த கொரோனால கொஞ்சம் ஒரு மாதிரியா போய்ட்டிருக்க நாங்க சீக்கிரம் ஆரம்பிச்சுருவோம் கவலைப்படாதீங்க
Rate this:
Cancel
Puratchi Thondan (a) Senathipathy - Chennai,இந்தியா
26-மே-202016:47:13 IST Report Abuse
Puratchi Thondan (a) Senathipathy ...... சுண்ணாம்பு தடவிடுவோம் ஜாக்கிரதை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X