இந்தியாவில் வசிக்கும் சீனர் நாடு திரும்ப சீனா அழைப்பு

Added : மே 26, 2020
Share
Advertisement
பீஜிங்: இந்தியாவில் வசித்து வரும் சீனர்கள் தங்களின் சொந்த செலவில் தாய் நாட்டிற்கு திரும்பி வரும்படி சீனா அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து இந்தியாவில் உள்ள சீனர்களை திரும்ப அழைத்து கொள்ள சீனா முன்வந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு ஒன்றை அந்நாட்டின் தேசிய மொழியான மாண்டரின் மொழியில்

பீஜிங்: இந்தியாவில் வசித்து வரும் சீனர்கள் தங்களின் சொந்த செலவில் தாய் நாட்டிற்கு திரும்பி வரும்படி சீனா அரசு அழைப்பு விடுத்துள்ளது.



latest tamil news



இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து இந்தியாவில் உள்ள சீனர்களை திரும்ப அழைத்து கொள்ள சீனா முன்வந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு ஒன்றை அந்நாட்டின் தேசிய மொழியான மாண்டரின் மொழியில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: இந்தியாவில் உள்ள சர்வதேச மாணவர்கள் , சுற்றுலாப்பயணிகள், தற்காலிக விசா பெற்றுள்ள வணிகர்கள் சீனாவிற்கு திரும்ப வேண்டும் என விரும்புவோர் சிறப்பு விமானத்தில் பயணிப்பதற்கு தங்களின் சொந்த செலவில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


latest tamil news



மேலும் விமான பயணத்திற்கான விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது. இதன் படி கொரோனா தொற்று இல்லாதவர்கள், காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் மேலும் அவர்கள் அனைத்து தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தொற்று நோய் ஏற்பாடுகளையும் ஏற்க வேண்டும் என அறிவித்துள்ளது.

லடாக் உள்ளிட்ட இடங்களில் சீனா மற்றும் இந்திய படைகள் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இச்சூழ்நிலையில் சீனா தங்கள் நாட்டவரை திரும்ப அழைத்து கொள்ளும் நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X