சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 மாதத்துக்கு பின் சலுான்கள் திறப்பு 'கட்டிங், ஷேவிங்' கட்டணம், 'கிடுகிடு'

Added : மே 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சேலம் : தமிழகத்தில், இரண்டு மாதங்களுக்கு பின், சலுான் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், நேற்று முதல், கட்டிங், ஷேவிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மார்ச், 24ல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், சென்னை தவிர, இதர மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், சலுான் கடைகள், பியூட்டி பார்லர்கள் திறக்க, தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இரண்டு மாதங்களுக்கு மேல், கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், அதற்கான வாடகையை செலுத்த வேண்டிய நிலை, சலுான் கடை உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.அது மட்டுமின்றி, ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்த தொழிலாளர்களுக்கு பாதி சம்பளத்தை உரிமையாளர்கள் வழங்கியுள்ளனர். இந்த இழப்பை ஈடு கட்டும் வகையில், தற்காலிகம் என்ற பெயரில், கட்டிங், ஷேவிங் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.

கடை திறக்கப்பட்ட முதல் நாளில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை கிளை சவர தொழிலாளர்கள் சங்கம், கட்டண உயர்வை அமல்படுத்தியது.இதன்படி, பெரியவர் கட்டிங், 200 ரூபாய், சிறுவர் கட்டிங், 150 ரூபாய், ஷேவிங், 100 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த அட்டவணை, தமிழகம் முழுதும் உள்ள சவர தொழிலாளர்கள் சங்கங்களின், 'வாட்ஸ் ஆப்' குழுக்களில் உலா வந்ததை அடுத்து, நேற்று முதல், சேலம் உட்பட பிற மாவட்டங்களிலும், கட்டணம் உயர்த்தப்பட்டது.இதேபோல, பெண்கள் அழகு நிலையங்களில், முடி வெட்டுதல், புருவம் திருத்துதல் ஆகியவற்றுக்கான கட்டணம், 40 முதல், 60 ரூபாய் வரை, உயர்த்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட சவர தொழிலாளர்கள் கூறுகையில், 'ஊரடங்கு காலத்தில் நிலவிய நெருக்கடியில் இருந்து தப்பிக்கவே, கட்டணத்தை தற்காலிகமாக உயர்த்தி உள்ளோம். ஆகஸ்ட் முதல் வாரத்தில், கட்டணம் குறைப்பு குறித்து, பரிசீலனை செய்யப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
26-மே-202021:44:41 IST Report Abuse
m.viswanathan எரிஞ்சு வீட்டுல புடுங்குன வரை லாபம்
Rate this:
Cancel
26-மே-202015:19:14 IST Report Abuse
Ramesh Sathiya எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது
Rate this:
Cancel
26-மே-202015:18:58 IST Report Abuse
Ramesh Sathiya எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X