ஊரடங்கிலும் வசூல் வேட்டை| Dinamalar

ஊரடங்கிலும் வசூல் வேட்டை

Added : மே 26, 2020
Share
அக்னி நட்சத்திர வெயிலோடு, 'லாக்டவுனும்' சேர்ந்து கொண்டதால், வீட்டில் இருந்த சித்ரா, தனது போனில் மித்ராவை அழைத்தாள்.''ஹாய்... அக்கா. சொல்லுங்க''''வட மாநில தொழிலாளர்களிட்ட, சில புரோக்கர்கள், ஊருக்கு கூட்டிட்டு போறோம்னு சொல்லிட்டு, வசூல்வேட்டை நடத்துறாங்களாம்,''''அட கொடுமையே...''''வேலை கொடுங்க; இல்லைன்னா, ஊருக்கு அனுப்பிச்சு வைங்க'னு தினமும், கலெக்டர்
 ஊரடங்கிலும் வசூல் வேட்டை

அக்னி நட்சத்திர வெயிலோடு, 'லாக்டவுனும்' சேர்ந்து கொண்டதால், வீட்டில் இருந்த சித்ரா, தனது போனில் மித்ராவை அழைத்தாள்.

''ஹாய்... அக்கா. சொல்லுங்க''''வட மாநில தொழிலாளர்களிட்ட, சில புரோக்கர்கள், ஊருக்கு கூட்டிட்டு போறோம்னு சொல்லிட்டு, வசூல்வேட்டை நடத்துறாங்களாம்,''

''அட கொடுமையே...''''வேலை கொடுங்க; இல்லைன்னா, ஊருக்கு அனுப்பிச்சு வைங்க'னு தினமும், கலெக்டர் ஆபீஸ், போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டமா வந்துடறாங்க,''

''இதை தெரிஞ்சுகிட்ட, சில புரோக்கர்கள், பலபேர் கிட்ட, 'ஆன்லைன்'ல பதிவு பண்ணி, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறோம்னு பேசி, 2 ஆயிரத்தில் இருந்து, 5 ஆயிரம் வரையிலும், வாங்கிட்டு, எஸ்கேப் ஆகிட்டாங்க,''
''பாதிக்கப்பட்ட சிலர், அவங்க மாநில பிரதிநிதிகளுக்கு, தகவல் சொல்லி, அவங்க ஏற்பாட்டில், ஒரு பஸ்சை வாடகைக்கு பேசி, போனாங்களாம்,''''நாடு இப்ப இருக்கற நிலையில, இப்படி பண்ற ஆட்களை புடிச்சு ஜெயில்ல போட்டாத்தான் திருந்துவாங்க,''
''கரெக்டா... சொன்னீங்க்கா. இதே மாதிரி ஜார்க்கன்ட் மாநில பெண் தொழிலாளர் வேலை தெரியுமா...''''அப்படி, அவங்க என்ன செஞ்சாங்க?''

''ஒரு பெரிய கம்பெனியில வேல பார்க்குற அவங்க, 'சரியா சாப்பாடு போடலை சம்பளமும் கொடுக்கலே'ன்னு, ஜார்க்கண்ட அரசுக்கு, சொல்லியிருக்காங்க. அங்கிருந்து, தமிழக அரசுக்கு வந்த உத்தரவால், அதிகாரிகள் குழு சம்பவ இடத்துக்கு போய் விசாரிச்சாங்க,''''அதில் என்ன ஆச்சு?''

''நல்ல சாப்பாடு போடறதையும், அவங்கவங்க அக்கவுன்டில் சம்பளம் போட்டதையும் உறுதிசெஞ்ச அதிகாரிகள், 'எதுக்கும்மா இப்படி சொன்னீங்க' கேட்டிருக்காங்க. அதுக்கு, 'சொந்த ஊருக்கு போகணும்; அதுக்குத்தான் அப்படி செஞ்சோம்,'னு ரொம்ப கூலாக சொன்னார்களாம்,''

''தொழிலாளர்கள் பதிலை, அந்த மாநில அரசுக்கு அனுப்புன பின்னாடிதான், இந்த பிரச்னை ஓஞ்சுதாம்,''''எல்லா நல்லா செஞ்சாலும், அவங்க இப்டித்தான்டி,'' என்ற சித்ரா, ''மித்து, அந்த ஆபீசில், செப்பல் கழற்றி விட்டுத்தான் போகணுமாம்,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.''எந்த ஆபீசில் இப்டி கெடுபிடிங்க்கா?''

''ஆர்.டி.ஓ., ஆபீசில்தான். தன்னோட ரூம்முக்குள் யாரும் செப்பல் போட்டுட்டு வரக்கூடாதுன்னு, 'ஸ்டிரிட்டா' சொல்லிட்டாராம். அவரோட அசிஸ்டென்ட், அவருக்கு ஒரு படி மேலயே போயிட்டார்,''
'இப்படித்தான், விவசாயிகள் வந்தப்ப, செப்பலை எல்லாரும் கழட்டுங்க சொன்னதற்கு, 'அப்படியெல்லாம், அம்மாவா பார்க்க வேண்டிய அவசியமில்லை; கலெக்டர பார்த்து பேசிக்கறோம்'னு சொல்லிட்டு கோபமா போயிட்டாங்களாம்'''ஏங்க்கா... கலெக்டர் ஆபீசுல கூட இப்படி இல்லையே. இந்தம்மா மட்டும் ஏன் இப்படி பண்றாங்க,''

''விசாரிச்சப்ப, அவங்களுக்கு 'ஏசி' இல்லாம இருக்க முடியாதாம். 'ஏன் இப்படி பண்றீங்கனு கோட்டாலும், 'வீசிங்' பிரச்னை இருக்கறதால, 'ஏசி' ரூமுக்குள்ள செருப்பு அணிந்தபடி யாரையும் விடறதில்லை'னு, என்ற தகவல் கிடைச்சுது,''

''நல்ல பாலிசிங்க்கா,'' சிரித்த மித்ரா, ''அக்கா... அவிநாசியில் பட்டா மாறுதலுக்கு போனா, பல மாதமாகுதாம்,''''ஏன்... எல்லாம், லீவில் இருக்காங்களா?''

''இல்லக்கா... ரொம்ப லேட் பண்றாங்கன்னு, கலெக்டர் ஆபீசுக்கு புகார் போனதில், அதிகாரிங்க சத்தம் போட்டிருக்காங்க. அதனால, தாலுகா பகுதி முழுதும் 'பென்டிங்'கில் உள்ள பட்டா மாறுதல் விண்ணப்பம் மீது, சர்வே செக்ஷன் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தாசில்தாருக்கு அனுப்பிச்சிட்டாங்க,''

''ஆனா, 'சாந்தமான' அதிகாரி, 'சரிபார்த்து' கையெழுத்து போட லேட்டாகும்னு, பைல்களை கிடப்பில் போட்டுட்டாராம்,''.''ஏற்கனவே, லாக்டவுனில், ரெண்டு மாசம் ஓடிடுச்சு. இப்பதான் வந்திருக்காங்க. இப்படி இழுத்தடிச்சா மக்கள் புலம்பாம என்ன செய்வாங்க?'' ஆவேசமாக பேசினாள் சித்ரா.

''அக்கா... ஒன் மினிட்,'' என்ற மித்ரா, தண்ணீர் குடித்து விட்டு, ''தாராபுரத்தி??, ஒருத்தர் பிஸினஸ் பண்ணிட்டே, வேலை பார்க்கிறாராம்,''

''அவரு என்ன பண்ணறார்?''''கம்யூனல் விங்'கில் வேலை பார்க்கிறாரு. பக்கத்தில இருக்கிற 'பழ...'தான் சொந்த ஊராம். இவர் எப்ப அந்த பிரிவில் ஜாய்ன் பண்ணினாரோ, அப்ப இருந்து, 'டியூட்டி' ஊருக்குள்ள வரதில்லையாம். தனியா பிஸினஸ் வேற பண்றாராம்,''''சோஷியல் மீடியாவில், வர்ற தகவலை வச்சிட்டு, ரிப்போர்ட் போட்டுடுவார். அந்த பிரிவோட அதிகாரியோட ஆதரவு இருக்குறதால, தனி ராஜாங்கமே நடத்துறாராம்,''அப்போது, மித்ராவின் அம்மா, ''மித்து, 'வீரராகவ' பெருமாள் கோவில் பக்கத்தில இருக்கிற அரிசிக்கடை வரைக்கும் போயிட்டு வர்றேன். 'லாக்' பண்ணிக்கோ,'' என சொல்லி கிளம்பினார்.''அக்கா... இ-பாஸ் விஷயத்தில், ஒரு குரூப் 'கல்லா' கட்டறாங்களாம்,''

''என்னடா... இன்னும் கம்ப்ளைன்ட் வரலியேன்னு பார்த்தேன்,''''பி.ஆர்.ஓ., ஆபீசில் மையம் கொண்டுள்ள ஒரு குரூப், நிறைய பேருக்கு, பாஸ் வாங்கி கொடுத்து, 'மேட்டர்' பார்க்குறாங்களாம். இவங்களுக்கு, கணக்கு வழக்கு பார்க்குற ஒரு அலுவலர், உடந்தையா இருக்காராம்,''

''இத்தனைக்கு, இ-பாஸ் ரொம்ப சென்சிடிவ்வான பிரச்னைனு தெரிஞ்சும், இவங்க வெளையாடிட்டே இருக்காங்க. மாவட்ட அதிகாரிதான், கட்டுப்படுத்தணும்,'' விளக்கினாள் மித்ரா.''மித்து, பல்லடத்தில், 'சிவ'மைந்தன் அதிகாரி ஒருத்தர், கொரோனா விழிப்புணர்வுனு சொல்லிட்டு, ஓட்டல், துணிக்கடைனு பெரிய கடைகளில், வசூல் வேட்டை நடத்துறாராம். கமிஷனர்தான் கண்டுக்கணும்,'' என்ற சித்ரா, ''ஓ.கே., மித்து, அப்புறமா கூப்டறேன்,'' என்றவாறு, மொபைல் போன் இணைப்பை துண்டித்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X