தோல்வியில் முடிந்த ஊரடங்கு: ராகுல்

Updated : மே 26, 2020 | Added : மே 26, 2020 | கருத்துகள் (86)
Share
Advertisement
Congress, Rahul, Rahul Gandhi, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, centre, central govt, india, corona crisis, காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி,

புதுடில்லி: இந்தியாவில், ஊரடங்கின் நோக்கம் மற்றும் குறிக்கோள் தோல்வியடைந்துள்ளது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

வீடியோ கான்பரன்சிங் முறையில் ராகுல் அளித்த பேட்டி:இந்தியாவில் மட்டும் தான், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீக்கப்படுகிறது. ஊரடங்கின் குறிக்கோள் மற்றும் நோக்கம் தோல்வியடைந்துள்ளது. ஊரடங்கு தோல்வியின் பாதிப்பை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. 21 நாளில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என நம்மிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 60 நாட்களை கடந்தும் தொற்று அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஊரடங்கின் நோக்கமும் குறிக்கோளும் தோல்வியடைந்தது மிக தெளிவாக தெரிகிறது.

சிறு மற்றும் குறு தொழிலுக்கு பணம் தேவைப்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் அது கொடுக்கப்படாதது கவலைக்குரியது. ஊரடங்கில் இருந்து நாம் என்ன எதிர்பார்த்தோமோ அது கிடைக்கவில்லை. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கு அடுத்து செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசின் திட்டம் என்ன?


latest tamil news
பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கவும், நிதியுதவி அளிக்கவும், சிறு குறு தொழிலதிபர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இல்லையென்றால், பெரிய இழப்பு ஏற்படும். நாட்டின் ஆன்மா மற்றும் பலமாக உள்ள ஏழை மக்களை நாம் பாதுகாக்க வேண்டும். நம்மை பற்றி மற்ற நாடுகள் என்ன நினைக்கின்றன என்பது பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. நாட்டின் ஆன்மா மற்றும் பலத்தை பாதுகாக்க வேண்டும். அரசு அறிவித்தது அனைத்தும் கடன் திட்டங்களாக தான் இருக்கிறது. மக்களுக்கு உடனடிதேவை நிதியுதவி தான். கடனுதவி இல்லை.

எல்லையில் என்ன பிரச்னை, அங்கு என்னநடந்தது, எப்படி நடந்தது என்பது குறித்து அரசு தெளிவாக விளக்க வேண்டும். தற்போது யாருக்கும் தெளிவாக எதுவும் தெரியவில்லை. நேபாளம், லடாக்கில் என்ன நடந்தது எப்படி என்பது குறித்தும், தெளிவாக விளக்க வேண்டும். எங்கு போய் வேலை பார்க்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதனை மாநில அரசுகள் முடிவு செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
01-ஜூன்-202022:33:28 IST Report Abuse
Gnanam ஐயா ராகுல், அந்த காங்கிரஸ் கஜானாவை திறந்து கொஞ்சம் சிறு குறு தொழிலதிபர்களுக்கு உதவி செய்ய கூடாதா? நாள்தோறும் ஏதாவது சொல்லி பத்திரிகைகளில் விதம் விதமாக போட்டோக்களை பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. உதவி கரம் நீட்டுவதிலும் சற்று அக்கறை செலுத்தலாம்.
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
01-ஜூன்-202015:14:48 IST Report Abuse
srinivasan ராகுல்ன் மிகப் பெரிய வெற்றி.
Rate this:
Cancel
shan - jammu and kashmir,இந்தியா
31-மே-202014:32:19 IST Report Abuse
shan என்ன இந்தாள் America இத்தாலி போல ஏன் கொத்து கொத்தாக சாக விடவில்லை இப்பொழுது வைரஸ் பலமின்றி இறப்பு குறைந்துள்ள பொது திறந்துட்டாங்க என்று கவலையோ? ஒருபக்கம் ஏழைகளை காப்பாத்தணும் என்கிறான் மறுபக்கம் ஏன் ஊரடங்கை தளர்த்துறீங்கள் என்கிறான் அவனுக்கே என்ன பேசுறோம் என்று தெரியாது இதுல அரசியல் வேற
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X