கொரோனா பாதிப்பு அதிகரித்தால் பாகிஸ்தானில் மீண்டும் ஊரடங்கு

Updated : மே 26, 2020 | Added : மே 26, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

இஸ்லாமாபாத்: 'பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், மீண்டும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்படும்' என, அந்நாட்டின் மூத்த சுகாதார அதிகாரியான சாபர் மிர்சா தெரிவித்துள்ளார்.



latest tamil news




சாபர் மிர்சா தெரிவித்துள்ளதாவது:பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவுடன், பாதிப்புள்ள ஒரு சில பகுகளுக்கு மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின், தேசம் முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் கடந்த மாதத்தின் இறுதியில், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. இதையடுத்து, இந்த மாதத்தின் தொடக்கத்தில் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால், 'சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்' என, உத்தரவிடப்பட்டிருந்தது. இதை யாரும் முறையாகக் கடைபிடிக்க வில்லை. இதனால் கொரோனா பாதிப்பும் அதனால் ஏற்படும் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.


latest tamil news




பாகிஸ்தானில் தற்போது, 56,349 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 1,167 பேர் உயிரிழந்துள்ளனர். 17,482 பேர் மட்டுமே பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், 1,748 பேர் புதிதாக வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மீண்டும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்தினால் மட்டுமே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியும். இதனால், மீண்டும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



'பாகிஸ்தானில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால் தொழிலாளர்களின் நிலை மேலும் கவலைக்குறியதாகும்' என, பொருளாதார வல்லுநர்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர். இருந்தும் உயிரிழப்புகளைத் தவிர்க்க ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
26-மே-202015:47:48 IST Report Abuse
sundarsvpr நம்முடைய நாட்டிற்கு எல்லையில் தொல்லை கொடுப்பது சைனாவும் பாகிஸ்தானும். ராணுவ வீர்கள் என்ற போர்வையில் அந்த நாடுகளில் தோற்று உள்ளவர்களை ஊடுருவல் செய்திடாமல் பார்த்திட நம் பாதுகாப்பு பலமாய் இருக்கவேண்டும். இவர்கள் தொல்லையை தவிர்த்திட அந்த நாடுகளில் கொரோனா கட்டுக்கு வருது நமக்கும் நல்லது.
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
26-மே-202015:24:58 IST Report Abuse
Nathan முக மூடி போட்டுக்கிட்டு மாரோட தழுவர இந்த ஆடி மட்ட புத்திசாலித்தனம் முழு மாட்டையே முழுங்கற மார்க்கதானுக்கு மட்டுமே வரும்.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
26-மே-202015:08:41 IST Report Abuse
Tamilan கொரானாவுக்கு பின்பும் , வருடம் முழுவதும் பாகிஸ்தானில் ஊரடங்கு நடைமுரையில் இருந்தால்தான் , பயங்கரவாத பரவலை தடுக்க முடியும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X