'ஊரடங்கை தளர்த்தினால் 2வது உச்சநிலையை சந்திப்போம்': சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Updated : மே 26, 2020 | Added : மே 26, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

ஜெனிவா: 'ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும்' என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.



latest tamil news




உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை பிரிவு தலைவரான மைக் ரேயான் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 55 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது. 3.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் சில நாடுகளில் கொரோனா தொற்று இறங்குமுகமாக உள்ளதால், முற்றிலும் ஒழிந்து விடும் என நாம் ஊகிக்க வேண்டாம்.
கொரோனா வைரஸ் தொற்று முழுவதுமாக ஒழியாத நிலையில், அது மீண்டும் அதிகரிக்காமல் இருக்க அனைத்து நாடுகளும் கவனமாக இருக்க வேண்டும். ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே அதன் இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும். இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


latest tamil news




'கொரோனா பாதிப்பு சற்றுக் குறைந்துள்ளதால், பல்வேறு நாடுகளும் ஊரடங்கைத் தளர்த்தி வருகின்றன. சில நாடுகள் ஊரடங்கை தளர்த்த திட்டமிட்டு வருகின்றன. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கையால், அனைத்து நாடுகளின் ஊரடங்கு தளர்வு முடிவில் மாற்றம் வரும்' என, வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26-மே-202018:06:04 IST Report Abuse
Krishna இந்த அமைப்பு தனது பெயரை கெடுத்து கொண்டது.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
26-மே-202016:16:20 IST Report Abuse
A.George Alphonse இந்த WHO இந்த கோரோனோ வைரஸ் சீனாவில் உருவான போதே எல்லா நாடுகளையும் எச்சரித்து ஊரடங்கை அமுல் படுத்தி தம் தம் நாட்டு மக்களை காப்பாற்றிக் கொள்ளும்படி SOS ஸ்யரனை ஒலித்திருக்க வேண்டும்.அப்போது ஒன்றும் செய்யாமல்,சொல்லாமல் இப்போது இதுபோன்றவைகளை கூறி மக்களை பயமுறுத்துகிறார்கள்.
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26-மே-202015:41:16 IST Report Abuse
Janarthanan நீங்க முதல தெளிவா மறைக்காமல் சீனாவில் ஏற்பட்ட பாதிப்பு ஒழுங்கா சொல்லி இருந்தால் எல்லா நாடுகளும் உஷாராகி இருப்பார்கள்??இப்ப கூட சீனவை பற்றி கரெக்ட் நம்பர் இல்ல???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X