பொது செய்தி

இந்தியா

25 நாளில் 44 லட்சம் புலம்பெயர் தொழிலாளரை ஏற்றிச் சென்ற ரயில்வே

Updated : மே 26, 2020 | Added : மே 26, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Shramik Special Trains, May 25, 44 Lakh, Passengers, delhi, india, special trains, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, railway ministry, railway minister, migrant workers, Indian Railways, ஷ்ராமிக், சிறப்பு ரயில், புலம்பெயர், தொழிலாளர்கள்

புதுடில்லி: கடந்த 25 நாட்களில் 3,274 சிறப்பு ரயில்கள் மூலம் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள 44 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு ஏற்றி சென்றுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வெளிமாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களுக்காக இந்திய ரயில்வே மூலமாக ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, ரயில்வே அமைச்சகம் நாடு முழுவதும், அந்தந்த மாநில அரசுகளின் தேவைகளுக்கேற்ப கடந்த மே 1ம் தேதி முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இதனை பயன்படுத்தி பல தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு சென்று வருகின்றனர்.


latest tamil news


இந்த சிறப்பு ரயில்கள் சுமூகமான முறையில் இயங்குவதற்கும், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்காகவும், மாநில அரசுகள், ரயில்வே சார்பில் மூத்த அதிகாரிகளை மைய அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த மே 1ம் தேதி முதல் மே 25ம் தேதி வரையில் 3,274 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கியதாகவும், அதில் 44 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு ஏற்றி செல்லப்பட்டதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது. நேற்று (மே 25) ஒரு நாளில் மட்டும் 223 ரயில்கள் மூலமாக 2.8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
26-மே-202018:58:31 IST Report Abuse
SAPERE AUDE கஷ்டமோ நஷ்டமோ நாம் பிறந்த ஊரில் நமது சொந்த பந்தங்களுடன் இருப்பதை பகிர்ந்து கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை.பணம் சம்பாதிக்க என்று மனைவி குழந்தைகளை விட்டு வெளி மாநிலங்களுக்கு ஓடி சம்பாதிப்பது என்ன வாழ்கை !கோவிட்-19 மக்களுக்கு பல பாடங்களை கற்று கொடுத்திருக்கிறது.
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
26-மே-202017:15:12 IST Report Abuse
Nathan உங்களுக்காக உழைத்துக் கொட்டிய உழைப்பாளிகளை, நெஞ்சில் ஈரமே இல்லாமே தவிக்க விட்டுட்டீங்களேடா பாவிகளா. சவுக்கியமா இருக்கற சோம்பேறிகளுக்கு கொடுக்கறதுல கொஞ்சம் இவங்க ஆதார தேவைக்கு கொடுக்காம, நேர டாஸ்மாக்குக்கு பயன் படும் படியா கொடுத்து, கொடூரமா அவுங்க புலம் பெயர பண்ணிய பாவம் சும்மா விடாது. இதுல, ராஜஸ்தான் அரசு ரொம்ப புத்திசாலியா நெனைச்சிண்டு யூபிக்கு பில் அனுப்பி சேக்கும் வாங்கித்து அசிங்கம், அதை விட அசிங்கம் ஆயிரம் பஸ் விட்ட புளுகு வாய் ,
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
26-மே-202017:04:55 IST Report Abuse
unmaitamil புலம்பெயர் தொழிலாளர்கள் என்று பொய்யாக புலம்பிக் கொண்டிருந்தவர்கள், இனியும் புலம்பாமல் அடுத்த பொய் நாடகத்திற்கு ரூம் போட்டு ஆலோசிங்க.. பப்பு, சொடலை, இத்தாலி ராணி, யக்கா எல்லோரும் வாங்க... தினமும் ஏதாவது பொய்களை எழுதிக்கிட்டு வாங்க. இல்லாவிடில் மக்கள் இந்த ஜோக்கர்களை மறந்துவிடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X