தெலுங்கானாவில் ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா

Updated : மே 26, 2020 | Added : மே 26, 2020 | |
Advertisement
ஐதராபாத் : கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து தெலுங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) புதிதாக 66 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. 3 பேர் பலியாகினர். இவ்வாறு மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் , மாநில மக்களின் நலனுக்காகவும் தெலுங்கானா அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து

ஐதராபாத் : கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து தெலுங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) புதிதாக 66 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. 3 பேர் பலியாகினர். இவ்வாறு மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் , மாநில மக்களின் நலனுக்காகவும் தெலுங்கானா அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலத்தின் பாதிப்பு குறித்து முதல்வர் சந்திரசேகர ராவ் விபரங்களை அதிகாரிகளிடம் அவ்வப்போது கேட்டறிவார். இந்நிலையில் தெலுங்கானாவின் கொரோனாபாதிப்புக்கு நேற்று (கடந்த 24 மணிநேரத்தில்) மேலும் 66 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த நோய் பாதிப்புகளின் எண்ணிக்கை 1,920 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 3 பேர் பலியானதை தொடர்ந்து, மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது.


latest tamil news



நோய் பாதிப்புகளில் இருந்து நேற்று ஒரே நாளில் 72 பேர் குணமடைந்தனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,164 ஆக இருந்தது. பாதிக்கப்பட்டவர்களில் 31 பேர் ஐதராபாத் நகர பகுதியை சேர்ந்தவர்கள். 15 பேர் வெளி மாநில தொழிலாளர்கள் எனவும், 18 பேர் பிற நாடுகளில் இருந்து மாநிலத்திற்கு திரும்பியவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. மேலும் ஒருவர் ரங்காரெட்டியையும், ஒருவர் மஹா.,வையும் சேர்ந்தவர்கள். 700 பேர் நோய் தொற்றுடன் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X