பொது செய்தி

இந்தியா

'ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் பெரிய பக்க விளைவுகள் இல்லை': ஐ.சி.எம்.ஆர்

Updated : மே 26, 2020 | Added : மே 26, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் பெரிய பக்க விளைவுகள் எதுவும் இல்லை. மருத்துவர்களின் மேற்பார்வையில் கீழ் பரிந்துரைக்கப்பட்டவர்கள் தொடர்ந்து எடுத்து கொள்ளலாமென இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கமளித்துள்ளது.முன்னெச்சரிக்கையாக மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா தொற்றுக்கு கொடுப்பதையும், அது தொடர்பான மருத்துவ

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் பெரிய பக்க விளைவுகள் எதுவும் இல்லை. மருத்துவர்களின் மேற்பார்வையில் கீழ் பரிந்துரைக்கப்பட்டவர்கள் தொடர்ந்து எடுத்து கொள்ளலாமென இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கமளித்துள்ளது.latest tamil news
முன்னெச்சரிக்கையாக மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா தொற்றுக்கு கொடுப்பதையும், அது தொடர்பான மருத்துவ பரிசோதனைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உலக சுகாதார மையம் அறிவித்தது.


latest tamil newsஇந்நிலையில் டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.சி.எம். ஆர். பொது இயக்குனர் பல்ராம் பார்கவா கூறியதாவது ;-'இந்தியாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் எந்தவொரு பக்க விளைவும் கண்டறியப்படவில்லை. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் உயிரியல் நம்பகத்தன்மை, இன்-விட்ரோ தரவு மற்றும் பாதுகாப்பை எடுத்து கொண்டு, கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் இதை பரிந்துரைக்கிறோம்
பொது சுகாதார ஊழியர்கள் கொரோனாவுக்கு தடுப்பு சிகிச்சையாக இதை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். ஆனால் உணவுடன் மட்டுமே இருக்க வேண்டும். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் குமட்டல், வாந்தி மற்றும் படபடப்பு போன்ற பொதுவான பக்க விளைவுகள் இருக்கும். உணவுடன் மட்டுமே இதனை எடுத்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தி உள்ளோம். வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள கூடாது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்து கொள்பவர்கள் பக்க விளைவுகளை தடுக்க, ஒருமுறை இ.சி.ஜி எடுக்க வேண்டும்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LetsVALUE.org - Democracy,இந்தியா
27-மே-202010:06:51 IST Report Abuse
LetsVALUE.org PLEASE note that the number of tests performed in other countries are more than that done in India
Rate this:
Cancel
VTR - Chennai,இந்தியா
27-மே-202008:58:19 IST Report Abuse
VTR WHO's announcement is with a motive to discredit the USA (just because Mr. trump strongly vouched for) and not in in the interest of world population
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
27-மே-202007:56:50 IST Report Abuse
vbs manian இந்த ஹைட்ராக்ஸி கிளோரோகுய்ன் பற்றி அபிப்ராயங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. பிரேசில் இதை நிறைய இந்தியாவிலிருந்து வாங்கியது. ஆனால் அங்கு தொற்று அதிகரித்து கொண்டே போகிறது. யார் கண்டார்கள் நாளை மறுபடியும் இதை தடை செய்வார்கள். இவர்களுக்கே தெளிவில்லை. இந்த லட்சணத்தில் நாட்டு வைத்தியம் செய்பவர்கள் மீது கேஸ் போடப்படுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X