அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி பிறந்த நாள்: தி.மு.வினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

Updated : மே 28, 2020 | Added : மே 26, 2020 | கருத்துகள் (62)
Share
Advertisement
கருணாநிதி பிறந்த நாள்: தி.மு.வினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை : 'கருணாநிதி பிறந்த நாளான, ஜூன், 3ல், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யுங்கள்' என, தி.மு.க., தொண்டர்களுக்கு, அக்கட்சி தலைவர், ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:

கொரோனா தொற்று பரவலால், மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மக்களுக்கு, முகக் கவசம், கிருமிநாசினி, அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்களை, தி.மு.க.,வினர் வழங்கினர்.கருணாநிதி இருந்திருந்தால், பொதுமக்களுக்கு தொண்டர்கள் செய்த உதவிகளை பார்த்து, பரவசம் அடைந்திருப்பார். பல இடங்களுக்கு பொருட்களை வழங்க, அவரே ஓடோடி வந்திருப்பார்.

விளிம்புநிலை மக்களின் அத்தியாவசிய தேவைகளை, சிந்தித்து நிறைவேற்றியவர் கருணாநிதி. சாமானியர்களின் தலைவராக தன்னை அடையாளப்படுத்தி, அப்படியே வாழ்ந்து காட்டியவர். ஒரு லட்சியத்துக்காக போராடிய அவரே, லட்சியத்தை நிறைவேற்றும் இடத்துக்கு வந்து, நிறைவேற்றி காட்டியவர்.கருணாநிதி பிறந்த நாளான, ஜூன், 3ம் தேதியை, மக்களுக்கு உதவிகள் செய்ய, உகந்த நாளாக மாற்றிக்காட்ட வேண்டும்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், நோய் தொற்றால் தனிமைபடுத்தப்பட்டோருக்கும், தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
28-மே-202006:29:17 IST Report Abuse
Natarajan Ramanathan தீயசக்தி சென்னை வெள்ளத்தின்போது ஏன் ஓடோடி வரவில்லை சுடலையே?
Rate this:
Cancel
27-மே-202022:10:33 IST Report Abuse
kulandhai Kannan பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் செவிவழியாகப் பரவியே இன்றளவும் நிற்கின்றன நம் இதிகாசங்கள். ஆனால், இரண்டே ஆண்டுகளில், கருணாநிதியை மக்கள் கிட்டத்தட்ட மறந்துவிட்டனர்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27-மே-202021:41:55 IST Report Abuse
Natarajan Ramanathan எழுந்து நிக்கவே முடியாத எப்படி ஓடோடி வருவார்? ......கொஞ்சமாவது பொருத்தமாக பேசுப்பா தத்தி சுடலையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X