பொது செய்தி

இந்தியா

போர் பதற்றத்தை குறைக்க இந்திய - சீன மூத்த ராணுவ தளபதிகள் பேச்சு

Updated : மே 26, 2020 | Added : மே 26, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
இந்தியா, சீனா, பேச்சுவார்த்தை, எல்லை, பதற்றம், LAC, Indian military, Chinese military, Senior, commanders, talk, defuse situation,

புதுடில்லி: இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே எல்லையில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்க, இரு நாடுகளை சேர்ந்த மூத்த ராணுவ தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கிழக்கு லடாக்கில் நிலவி வரும் பதற்றத்தை குறைக்க, இச்சந்திப்பு லடாக்கில் மே 22 மற்றும் 23 தேதியில் நடந்துள்ளது. டில்லி மற்றும் பீஜிங்கில் அமைதி தீர்மானத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லடாக்கில் உள்ள பங்கோங் தசோ ஏரி மற்றும் கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா இடையே ராணுவ பதற்றம் குறையவில்லை. இரு நாட்டு ராணுவ தளபதிகள் லடாக்கில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நியைில், இந்த பிரச்னையை சமாளிக்க இரு நாட்டு தலைநகரங்களிலும் ராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியா அமைதியை விரும்பிய போதும், நாட்டின் நிலப்பரப்பை பாதுகாக்க, எல்லையில் சமரசம் செய்து கொள்ளாது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


latest tamil newsஇரு நாடுகளுக்கு இடையில் 5 சுற்றுகளாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், எல்லையில் ராணுவ பதற்றம் குறையவில்லை. மே 5ம் தேதி, இரு நாடுகளின் படையினருக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, எல்லையில் ராணுவ பலத்தை இரு நாடுகளும் அதிகரித்து வருகின்றன. சுமூகமான தீர்வு ஏற்படும் வரை, ராணுவ தளபதிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, மே 5ம் தேதி சுமார் 250 இந்திய மற்றும் சீன வீரர்கள் இரும்பு கம்பிகள் மற்றும் தடியடிகளுடன் மோதினர். இதில் இருபுறமும் பல வீரர்கள் காயமடைந்தனர். லடாக்கில் உள்ள கால்வன் நதி பகுதியில், இந்தியா சாலை அமைப்பதற்கு, சீனா எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது அந்த சாலையின் கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sharvintej - madurai,இந்தியா
27-மே-202011:56:55 IST Report Abuse
Sharvintej நம்ம ஊர் சுடலை தளபதி இடம்பெறுவாரா ?
Rate this:
Cancel
C.Elumalai - Chennai,இந்தியா
27-மே-202010:41:40 IST Report Abuse
C.Elumalai 1962 இல் சீன அதிபருடன் நேரு சந்திப்புக்கு பிறகுதான்,யுத்தத்தின் மூலம் இந்தியாவின் பலசதுர கிமி நிலத்தை, ஆக்கிரமித்தது சீனா. ஆசியஜோதி நேரு அந்த இடம் மாடு ஆடு மேய்க்க முடியாத இடம் என்று போனால் போகட்டும் என்றுதன் கையாலாகாத திறமையை காட்டினார்.இப்போ மோடிஜி இந்தியாவிடம் வாலாட்டினால்,வாலை ஒட்ட நறுக்கிவிடுவார். எங்கே இத் காங் ஆட்களுக்கு இது தெரியபோகுது.
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-மே-202016:10:10 IST Report Abuse
தமிழ்வேல் ஞாபகப் படித்திடீங்க.. இன்னைக்கு அவரது நினைவுநாள்.....
Rate this:
Anandan - chennai,இந்தியா
28-மே-202004:40:26 IST Report Abuse
Anandanஅடேய், அன்னைக்கு நம்மிடம் ஆயுதம் இல்லை இன்னைக்கு ஆயுதம் இருந்தும் அமைதி. சும்மா கம்பு சுத்தாதீங்க....
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
27-மே-202009:38:16 IST Report Abuse
Rpalnivelu இப் பிரச்னையை கையாளத் தெரியாத ஆசிய ஜோதியின் இறந்த தினம் இன்று.
Rate this:
Anandan - chennai,இந்தியா
28-மே-202004:41:34 IST Report Abuse
Anandanஇன்னைக்கும் அதே நிலைதான் சும்மா வெறும் வாயில் பந்தா காட்டினா சரியாகிடுமா? அன்றைக்கு அமெரிக்கா சீனா பக்கம் இன்றைக்கு நம் பக்கம் அது ஒன்றுதான் நல்ல விஷயம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X