பொது செய்தி

இந்தியா

கொரோனா நடவடிக்கைகளை ஆவணப்படுத்துகிறது அரசு

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி: நாட்டில், கடந்த ஜனவரி முதல், கொரோனாவை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் ஆவணப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துஉள்ளது.



latest tamil news



கொரோனா வைரஸ், சீனாவில், கடந்த டிசம்பரில் பரவியது. டிசம்பர், 31ல் தான் கொரோனா பரவல் பற்றி, உலகுக்கு சீனா தெரிவித்தது. அதன்பின், பல நாடுகளுக்கும் கொரோனா பரவியது. இந்தியாவில், மார்ச் துவக்கத்தில், வைரஸ் பரவ ஆரம்பித்தது, வைரஸ் பரவலை தடுக்கவும், எதிர்கொள்ளவும், மத்திய மற்றும் மாநில அரசுகள், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளன.


latest tamil news



இந்நிலையில், கொரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் ஆவணப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது பற்றி மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:நாட்டில் இதுவரை, பல தொற்று நோய்களால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆவணப்படுத்தப்பட்டதில்லை. முதல் முறையாக, கொரோனா தொற்றுநோய் பரவலை தடுக்க எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஆவணப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


latest tamil news



முன்னதாக, பிரதமரின் முதன்மை செயலர், பி.கே.மிஸ்ரா, மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு, கடிதம் எழுதினார்.அதில்,'கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தொற்று நோயால், கற்றுக் கொண்ட பாடங்கள், ஏற்படுத்திக் கொண்ட பழக்கங்கள், புதிய கண்டு பிடிப்புகள் உட்பட அனைத்தையும் ஆவணப்படுத்த வேண்டும்' என, தெரிவித்திருந்தார். இந்த பணிகளுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளராக, என்.டி.ஆர்,எப்., எனப்படும், தேசிய பேரிடர் மீட்பு படை நியமிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
27-மே-202017:38:49 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN ஊடகங்களை அரசுடைமை ஆக்கினால்தான் எதிர்காலம் நல்லதாக இருக்கும். கட்டுப்பாடு விதிக்கனும் .தும்பினால் இரும்பினால்கூட அதை ஓர் கருத்தாக கையில் எடுத்து பிழைக்க நினைக்கும் ஊடகங்களை என்ன வென்று சொல்வது.நாகரிகமாக தெரியல.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
27-மே-202009:21:45 IST Report Abuse
J.Isaac ஆவணப்படமா ? ஆணவப்படமா?
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
27-மே-202009:20:51 IST Report Abuse
J.Isaac தேர்தல் நேரத்தில் வெளியிடப்படவேண்டிய மோடி சினிமாபடம் இன்னும் ரிலீஸ் ஆகலியே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X