போர் நிறுத்த அறிவிப்பால் 900 தலிபான்கள் விடுதலை

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

காபூல்: ஆப்கானிஸ்தானில், 'தலிபான்கள் போர் நிறுத்தம் அறிவித்ததை தொடர்ந்து, பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, 900 கைதிகள் விடுவிக்கப்படுவர்' என, நேற்று அரசு அறிவித்துள்ளது.



latest tamil news



தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், அமைதியை ஏற்படுத்த, அமெரிக்க பாதுகாப்பு படையினருக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே, பிப்., 29ல், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, சிறையில் உள்ள, 5,000 தலிபான் கைதிகளை, அரசு விடுவிக்கும் நிலையில், தலிபான்களிடம் சிக்கியுள்ள, அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர், 1,000 பேரை விடுவிப்பது என, முடிவு செய்யப்பட்டது.

ஆனால், காபூலில் நிலவிய அரசியல் ரீதியிலான பிரச்னைகள் மற்றும் தலிபான்களை விடுவிப்பதில் தாமதம் காரணமாக, இந்த ஒப்பந்தத்தில் முன்னேற்றம் காணாமல் இருந்தது.இதற்கிடையே, முஸ்லிம்களின் ரமலான் பண்டிகையை தொடர்ந்து, தலிபான்கள் மூன்று நாள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். போர் நிறுத்தம், நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், 'தலிபான் அமைப்பைச் சேர்ந்த, 900 கைதிகள் விடுவிக்கப்படுவர்' என, ஆப்கன் அரசு அறிவித்து உள்ளது.


latest tamil news



அத்துடன், 'தலிபான்கள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும்' என, தேசிய பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர், ஜாவித் பைசல் வலியுறுத்திஉள்ளார்.கைதிகளை விடுவிப்பதால் வன்முறைகள் குறையும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், 'போர் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்' என, தலிபான் அமைப்பின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-மே-202016:06:19 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ, தினைக்கும் தீபாவளிதான்..
Rate this:
Cancel
27-மே-202010:30:54 IST Report Abuse
நக்கல் வெளில இருப்பவனுக்கே சோறு தண்ணி இல்ல... இதுங்க வெளில வந்து எத்தனை குடிய கெடுப்பாங்களோ.... கொரோனாவை விட மோசமானவர்கள்...
Rate this:
Cancel
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
27-மே-202010:27:37 IST Report Abuse
aryajaffna இந்த பேசு வார்த்தை அமெரிக்காவின் முயர்ச்சியில் நடந்தது, தனது மிக விசுவாசிகளை விடுத்துள்ளது, பல நாடுகளில் வெகு விரைவில் பயங்கர வாத தாக்குதல்களை நடத்த அமெரிக்கா திடடமிட்டுள்ளதற்காக அறிகுறி இது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X