திருப்பதி தேவஸ்தானம் மீது பொது நல வழக்கு தாக்கல்

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement

திருப்பதி: திருப்பதி தேவஸ் தானத்தின் மீது, பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வரலாம் என, எதிர்பார்க்கப் படுகிறது.latest tamil newsதிருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, நன்கொடையாக வழங்கப்பட்ட நிலங்களை, பகிரங்க ஏலம் மூலம் விற்க, தேவஸ்தானம், கடந்த வாரம், 'நோட்டீஸ்' வெளியிட்டது. அதற்கு, தெலுங்கு தேசம், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால், 'இந்த நிலங்களின் ஆய்வறிக்கை, தெலுங்கு தேசம் ஆட்சியில் இருந்த போது நடத்தப்பட்டது; இதுபோல் பயன்படாமல் இருக்கும் நிலங்களை, அறங்காவலர் குழு தீர்மானத்தின் படி விற்கும் உரிமை, தேவஸ்தான சட்டத்தில் உள்ளது' என, அறங்காவலர் குழு தெரிவித்தது.


latest tamil newsஇந்நிலையில், பகிரங்க ஏலம் நடத்த எதிர்ப்பு அதிகரித்ததால், நேற்று முன்தினம் மாலை, தேவஸ்தான நிலங்களை விற்க, ஆந்திர அரசு தடை விதித்தது. நில விற்பனையை எதிர்த்து, ஆந்திராவின் அனந்தபுரத்தை சேர்ந்த, பா.ஜ., நிர்வாகி அமர்நாத், உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை, இன்று நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vivek c mani - Mumbai,இந்தியா
27-மே-202018:36:54 IST Report Abuse
vivek c mani ராஜாக்கள் ஆண்ட காலத்தில் கோவிலுக்காக நிரந்தர மானியங்களை ஏற்படுத்தி கோவில்களின் பராமரிப்பிற்காக என்றென்றும் யார் தயவும் நாட கூடாது எனும் நல்லெண்ணம் கொண்டு கோவில்களின் பராமரிப்பிற்கும் வழி செய்தார்கள். அவ்வாறு கொடுத்த மானியங்கள் நிலமாகவோ , தானியமாகவோ , நகைகளாகவோ இருக்கலாம் . நிலசாகுபடியில் ஒரு பங்கை கோவிலுக்கு கொடுக்கப்படவேண்டும் எனும் விதிமுறைகளும் இருந்தது. இதுதவிர பொது மக்களும் தம்மாலியன்ற பொருட்களையும் ,சொத்துக்களையும் கோவிலுக்கு அர்ப்பணிக்கும் வழக்கம் உண்டு.கோவில் நன்கு பராமரிக்கப்பட்டால் நாட்டில் நன்னெறி பெருகும் ,நியாயமான வாழ்க்கைமுறை நிலவும் , தமிழ் மொழியும் சமஸ்க்ரித மொழியும் இறை வழிபாட்டில் வளர்ந்து மொழிகள் வளர்ச்சியடையும் மற்றும் மக்களுக்கு நன்மை பெருகும் என வழிமுறைப்படுத்தினர். தமிழ் வளர்த்த பெரியோர் பாடல்கள் பாடப்பெறும் . இவ்வாறு கோவிலுக்காக கொடுக்கப்பட்ட சொத்தை மன்னர்கள் திரும்ப வாங்குவதோ அல்லது எடுத்துக்கொள்ளுவதோ கூடாது. மன்னர்கள் இறை பக்தி பூண்டவர்கள் ஆனதால் கோவில் சொத்துக்கள் எடுத்துக்கொள்வது , அபகரிப்பது என்பது பாவ செயல் என கருதினர். ஆங்கில ஆட்சியில் 1800CE பிறகு மன்னர்களின் சொத்து மட்டுமல்லாமல் கோவில் சொத்துக்களையும் சுரண்ட ஆரம்பித்தார்கள் .ஆயிரம் வருடங்களுக்கும் முன்பிருந்தே ஹிந்துக்கள் பொறுப்பில் இருந்த கோவில்கள் இந்தியாவிற்கு வியாபாரிகளாக வந்து அரசாட்சியில் அமர்ந்த ஆங்கிலேயர்கள் கோவில்களை தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தது மிக கீழ்த்தரமான செயல். ஹிந்துக்களை மிகவும் இழிவான நிலைக்கு மேலும் தள்ளவே கோவில்களையும் தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தனர். அன்று அவர்கள் 200 வருடங்களுக்கு முன்னால் ஆரம்பித்து வைத்தது இன்றும் தொடர்வது ஹிந்துக்களின் மத உரிமையை பறிப்பதாகும். அப்பே டுபாய்ஸ் ( Abbe Dubois ) எனும் பிரெஞ்சு மிஷனரி 1792- 1823 இடையில் இந்தியாவில் வாழ்ந்தார். அவர் மேற்கொண்ட ஆராய்ச்சி இந்தியாவை கிருத்துவ நாடாக மாற்றுவதற்கான வழிமுறைகள். இதற்காக அவர் இந்தியா மக்களுடன் ஒன்றுசேர்ந்து வாழ்ந்து அவர்கள் பழக்க வழக்கங்களை தெரிந்து கொண்டு அதன்பின் கிறித்துவ மதத்தை போதித்து மதம் மாற்றுவது குறிக்கோளானது. பிரான்ஸ் நாடும் பிரிடிஷ் நாடும் ஒன்றுக்கொன்று எதிராக போர் தொடுத்தாலும், பிரெஞ்சு மிஷனரி அப்பே வின் குறிக்கோளை மனதில் கொண்டு அவர் செய்யும் ஆராய்ச்சி ஊக்குவிக்கப்பட்டது. அவர் ஆராய்ச்சி ஒரு ஆங்கில அரசின் புத்தகமாக பதிக்கப்பட்டு ஆங்கில அரசின் பல திட்டங்களுக்கு அஸ்திவாரமாக அமைத்தது. குறிப்பாக மெக்காலே கல்வி திட்டம் இந்தியா கலாச்சாரத்தை இழிவாகக்காட்டி ஆங்கில செயல்முறைகள் உயர்வாக காட்டப்பட்டன. அப்பே விற்கு பணஉதவி மட்டுமல்லாமல் இந்தியா நாட்டு பணத்திலிருந்து அவருக்கு பென்ஷனும் கொடுக்கப்பட்டது.அவர் எழுதிய கட்டுரை மற்றும் ஆராய்ச்சி குறிப்புகள் புத்தக வடிவில் வந்தது . அதிலிருந்து முகவுரையின் சில வரிகள்: “Nevertheless what has now become of the innumerable deities of Greece and Rome ? They have vanished like an empty , transitory dream . Let us pray that Almighty may be pleased to allow the torch of truth to illumine the countries watered by the Ganges. Doubtless the time is still far distant when the stubborn Hindu will his eyes to the light and tear himself away from his dark superstitions but let us not despair a day will come when the standard of Cross will be flying over temples of India as it flies now over her strong places” சுருக்கமாக இதன்மூலம் அறியவேண்டியதென்னவென்றால் இந்தியர்கள் மூடநம்பிக்கை உள்ளவர்கள் . பண்டைய கிரேக்க மற்றும் ரோமா நாகரீகங்கள் நிலைத்ததா என்ன. கனவாக மறைந்தது. அதுபோல் இந்தியா நாகரீகமும் கலாசாரமும் அழியும் நாள் வெகு தூரத்தில் இல்லை. நாம் நம்பிக்கையிழக்க வேண்டாம் . எங்கெல்லாம் கோவில்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் சிலுவை சின்னம் பறக்கும் நாள் வரும். பண்டைய இந்தியாவின் அறிவுவளர்ச்சியும் , விஞ்ஞாந முதிர்ச்சியையும் அறியாத ஒரு மிஷனரி இந்தியாவை கையகப்படுத்த வழிகளை ஆராய்ச்சி செய்தார் . ஆனால் எந்த அளவிற்கு இவர்கள் அறியாமை இந்தியாவின் உயர் நிலையை பற்றி , மற்றும் மூடநம்பிக்கை யாரிடமிருந்தது என்பதற்கோர் உதாரணம்- உலகம் உருண்டையானது மற்றும் கிரஹங்களின் சுழற்சி பற்றி வேத புராண காலத்திலிருந்தே இந்தியர்கள் அறிந்திருந்தார்கள். ஆர்யபட்டர் 499CE காலத்திலேயே உலகம் உருண்டை எனவும் மற்றும் பல விண்வெளி நிகழ்ச்சிகளையும் தம் புத்தகத்தில் எழுதியிருந்தார்.. கலிலியோ என்பவர் அதை பற்றி கூறியது 1633 இல். . அதாவது பிற்கால இந்தியர்கள் கலிலீயோவிற்கு 1133 வருடங்களுக்கு முன்பே கூறியது.. வேத காலம் எனில் இன்னும் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பாக. கலிலியோ கூறியதை ரோமன் கத்தோலிக்க சர்ச் ஏற்க மறுத்தது. கலிலியோ தாம் கூறியதை ஆர்யபட்டா அவருக்கு 1100 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் கண்டுபிடித்ததை அப்போது அறியவில்லை. கலிலியோ மண்டியிட்டு தாம் கூறியது தவறு என சொல்ல நிர்பந்திக்கப்பட்டார். 1992 தான் சர்ச் கலிலியோ கூறியது தவறல்ல என ஒப்புக்கொண்டது. இதை கூறியது எதற்காக எனில் இந்தியாவை ஆண்ட வெளிநாட்டார்கள் இந்தியர்களை இழித்தும் பழித்தும் , குறைசொல்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அப்படி செய்யாவிட்டால் அவர்கள் இந்தியர்களை விட உயந்தவர்கள் என பறைசாற்றுவதெப்படி? 1800 களில் தொடங்கிய கோவில் சொத்து அபகரிப்பு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் ,முன் போல் மன்னர்களின் செயல் படி கோவில்களை பராமரிக்காமல் அல்லது அறக்கட்டளை நிறுவி ஹிந்துக்களிடமே திருப்பி பொறுப்பினை கொடுக்காமல், ஆங்கிலேயர் வழியை பின்பற்றியது ஹிந்துக்களை புண் படுத்தும் செயலாகும். செகுலர் நாடு என கூறிக்கொண்டு அரசு ஹிந்துக்களின் சமய கோவில்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து ,மற்ற மதத்தினர் அவர்கள் வழிபாட்டு தளங்களை நிர்வகிக்க அனுமதிப்பது எப்படி செகுலர் என கூற முடியும். ஆங்கிலேயர்களை போல் அரசே கோவில்கள் நடத்துவதால் பல கோவில்களின் அவலநிலை கண்ணீர் சிந்த வைக்கிறது. சொத்துக்கள் நிறைத்த கோவில்கள் இன்று விளக்கேற்ற எண்னை இல்லாத பரிதாப நிலையிலுள்ளது. கோவில்களை நன்கு பூஜை செய்து இறைவனை சிந்தித்து மக்கள் நலன் நாடும் கோவில் பூஜாரிகள் வருவாயில்லாமல் தினசரி உணவுக்கே வழியில்லாமல் திணறும் நிலைக்கு யார் காரணம்? தேவை- கோவில் நிர்வாக சீர்திருத்தமும் , உண்மையான ஹிந்து மக்கள் கோவில் நிர்வாக வழிபாட்டிற்கு உட்படுத்தப்படுவதும். இல்லயெனில் நாட்டில் எங்கேல்லாம் கோவில் சொத்துக்கள் மீதம் உள்ளனவோ அவையும் காணாமல் அல்லது கிடைக்காமல் அல்லது உருப்படி தேறாமல் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
27-மே-202017:20:52 IST Report Abuse
Suppan நிர்வகிக்க முடியாத பயன் படாத சொத்துக்களை விற்பது தவறல்ல. பல கோவில்களில் காணிக்கைகள் விற்கப்படுகின்றன. இவைகளை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் வரும் பணத்தை அரசு கஜானாவில் பின்புறமாக செலுத்துவது/ எடுத்துக் கொள்வது தவறு.
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
27-மே-202016:36:37 IST Report Abuse
Srivilliputtur S Ramesh ஹிந்து பக்தர்கள் தானமாக குடுத்த சொத்தை அல்லது பக்தர்கள் பணத்தில் வாங்கிய சொத்தை ஏலம் விடுவது அயோக்கியத்தனம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X