பொது செய்தி

தமிழ்நாடு

மாதவரத்தில் அதிகாரிகள் ஆய்வு; தற்காலிக மார்க்கெட் விரிவாக்கம்

Added : மே 27, 2020
Share
Advertisement

மாதவரம் : கொரோனா எதிரொலியால், கோயம்பேடில் இருந்து மாற்றி அமைக்கப்பட்ட, பூ மற்றும் பழம் விற்பனைக்கான, தற்காலிக மார்க்கெட்டை, விரிவாக்கம் செய்ய, அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சென்னை கோயம்பேடில், ஏப்ரல் மாதம், கொரோனா தொற்று வேகமாக அதிகரித்தது. அதை, கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, கோயம்பேடு மார்க்கெட்டை மூன்றாக பிரித்து, வெவ்வேறு இடங்களுக்கு மாற்ற, அரசு முடிவு செய்தது.அதற்காக, சி.எம்.டி.ஏ., - மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள், வியாபாரிகளுடன் பேச்சு நடத்தினர்.இதையடுத்து, பூ மற்றும் பழ விற்பனை செய்யும் கடைகள், மாதவரம் புறநகர் பஸ் நிலைய வளாகத்திற்கு மாற்றப்பட்டன.அங்கு, 200 கடைகளுடன் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டது.இம்மாதம் முதல், பூ, பழ வியாபாரிகள், சிறிது சிறிதாக அங்கு வியாபாரத்தை துவங்கினர். தோட்டக்கலை துறையின் மூலமும், பழ விற்பனை நடந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று காலை, 8:25 மணிக்கு, சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர் மகேஷ் அகர்வால், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், அங்கு ஆய்வு செய்தனர்.அப்போது, வியாபாரிகள், மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, உரிய ஏற்பாடுகளை செய்வது குறித்தும், அதற்காக, மேலும் பல கடைகளை, பஸ் நிலையத்தின் முதல் தளத்தில் அமைப்பது குறித்தும், ஆலோசிக்கப்பட்டது.உரிய பரிசீலனைக்கு பின், தற்காலிக மார்க்கெட்டிற்கான, விரிவாக்கம் செயல்படுத்தப்படும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X