போபாலில் கொரோனா பாதித்தவர்களுக்கு ஹோமியோபதி சிகிச்சை

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
போபால் : போபாலில் லேசான கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஹோமியோபதி சிகிச்சையால் குணமடைந்ததாக அரசு ஹோமியோபதி கல்லூரி தெரிவித்துள்ளது.கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய பிரதேசத்திலும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் பட்டியல் நீண்டு செல்கிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் உடல்நிலைக்கு ஏற்பவும்,

போபால் : போபாலில் லேசான கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஹோமியோபதி சிகிச்சையால் குணமடைந்ததாக அரசு ஹோமியோபதி கல்லூரி தெரிவித்துள்ளது.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய பிரதேசத்திலும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் பட்டியல் நீண்டு செல்கிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் உடல்நிலைக்கு ஏற்பவும், நோயின் தன்மைக்கு ஏற்றவாறும் சிகிச்சை முறைகள் அளிக்கப்பட்டு வருகிறது. பாதிப்பு அதிகமானால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் போபாலில் லேசான கொரோனா பாதிப்பு உடைய சிலருக்கு அளிக்கப்பட்ட ஹோமியோபதி சிகிச்சை வெற்றிகரமாக அமைந்து அவர்கள் குணமடைந்ததாக அரசு ஹோமியோபதி கல்லூரி தெரிவித்துள்ளது.


latest tamil newsஇது தொடர்பாக அம்மாவட்ட கலெக்டர் தருண் பித்தோட் கூறியதாவது : மாநிலத்தில் தொற்று நோய் பாதித்தவர்களுக்கு மருத்துவர்கள் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் போபால் நகரில் லேசான பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்ததற்கு காரணம் ஹோமியோபதி மட்டுமே என்பது தவறு. இருப்பினும் நோயாளிகளுக்கு அலோபதி மற்றும் ஹோமியோபதி மருந்துகள் வழங்கப்பட்டிருக்கலாம். இது தற்செயலாக இருக்கலாம். மேலும் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவும் இருக்கலாம்.

கொரோனா பராமரிப்பு மையம் (சி.சி.சி) போபாலின் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி நேற்று, ஹோமியோபதியை பயன்படுத்தி 6 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்ததாக கூறியது. இந்த பராமரிப்பு மையம் லேசான , மிகவும் லேசான மற்றும் சந்தேகத்திற்கு இடமான நோயாளிகளை கண்காணிக்கிறது. மே.,16 ல் அனுமதிக்கப்பட்ட 6 நோயாளிகள் நேற்று முழுமையாக குணமடைந்தனர். 2 குழந்தைகளுக்கு ஹோமியோபதி மருந்தும் வழங்கப்பட்டது. ஆனால் ஹைட்ராக்சிகுளோரோக்வின் அல்ல. பத்து நாட்கள் பெற்றோருடன் வாழ்ந்த போதிலும் சிறு குழந்தைகளுக்கு எந்த அறிகுறிகளும் உருவாகவில்லை.

மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சுனிதா தோமர் கூற்றுபடி, நோயாளிகளுக்கு ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்களின்படி சேர்க்கப்பட்ட நேரத்தில் மட்டுமே ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வழங்கப்பட்டது, ஆனால் பின்னர் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஊக்கங்கள் வழங்கப்பட்டன. நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் ஆதரவு தேவையில்லை என்பதை ஹோமியோபதி மருத்துவம் உறுதிசெய்ததாகவும், அவர்களின் நிலை மிக வேகமாக மேம்பட்டதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. எந்தவொரு நோயாளியையும் பெரிய மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு கூறினார். இருப்பினும்நோயாளிகளுக்கு அல்லோபத, ஹோமியோபதி என இரண்டும் வழங்கப்பட்டது. இவ்வாறு தெரிவித்தார்.


Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
svs - yaadum oore,இந்தியா
27-மே-202011:56:31 IST Report Abuse
svs மாற்று மருத்துவத்தில் சில போலி சர்வரோக நிவாரணிகளால்தான் பிரச்சனை உண்டாகிறது ....அல்லோபதி மருந்து கம்பனிகள் மாற்று மருத்துவத்தை தடை செய்யவே ஏராளமாக பணம் செலவிடுகிறது .... இப்போது ஹோமியோபதி மற்றும் சித்த ஆயுர்வேத மருந்துகள் விநோயோகம் ...இதனால் இப்போது மருத்துவமனையில் சேர்க்கப்படும் நேரமும் குறைந்துள்ளதாக அரசு மருத்துவர்கள் அறிவிப்பு .....
Rate this:
27-மே-202016:22:50 IST Report Abuse
ஆரூர் ரங்அலோபதி எனும்.பெயரே தவறு .அது 100 அறிவியல் சார்ந்த நிரூபண அடிப்படை மருத்துவம். மாற்று எனக்கூறிக்கொள்ளும் முறைகளிலுள்ள அறிவியல் நிரூபணமற்ற மருந்துகளில் பலவித ஆபத்துக்கள் உண்டு. ஏமாற்றமே அதிகம் .இன்னும் சொல்லப் போனால் பல நவீன மருந்துகளின் மூல வேரே பாரம்பரிய மருந்துகளே என்பதே அறிவியலாளர் ஏற்றுக்கொள்வது. அவர்களுக்கு துவேஷமில்லை . மாற்று மருத்துவத்தை அறிவியல் மருத்துவம் அழிக்கிறது என்பது அபத்தம் . போலிகளுக்கு எதிரி வெளியிலில்லை.போலிகளே எதிரி. அறிவியல் பூர்வமாக நிரூபித்தால்( கீழா நெல்லி போல) எம்மருந்தையுமே நவீன மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டியதில்லை....
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
27-மே-202008:45:14 IST Report Abuse
Bhaskaran Allopathic maruthuvar gal matra marunthukalai oththukollamaataargal
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
27-மே-202006:24:37 IST Report Abuse
வாய்மையே வெல்லும் போபால் மருத்துவர்களே கலக்கிடீங்க.. உண்மையாகவே ஹோமியோபதி நல்ல மருந்துதான்...அது கொரோனாவுக்கு கொடுப்பது வெற்றி கண்டது .. நல்ல செய்தி.. வாழ்க மருத்துவர் சமூகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X