பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் இன்று துவக்கம்; ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு ஏற்பாடு

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
paper correction, HSC, Tamil Nadu, பிளஸ் 2, விடைத்தாள் திருத்தம், துவக்கம், ஆசிரியர், கொரோனா தடுப்பு, ஏற்பாடு

சென்னை : பிளஸ் 2 விடைத்தாள் திருத்த பணிகள் இன்று(மே 27) துவங்கும் நிலையில், திருத்தும் மையங்களில், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகளின் பட்டியலை ஒட்டி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச்சில் முடிந்தன. விடைத்தாள்கள், கட்டுக்காப்பு மையங்களில், இரண்டு மாதங்களாக, போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விடைத்தாள் திருத்த பணிகள், இன்று துவங்க உள்ளன. ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தாலும், திருத்தும் பணிகளை திட்டமிட்டபடி துவங்க வேண்டும் என, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

திருத்தும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை என்றால், கல்வி துறையின் சார்பில் கார் அனுப்பி, அவர்களை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம், 44 ஆயிரம் ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபட உள்ளனர். அனைத்து ஆசிரியர்களுக்கும், திருத்தும் மையங்களில், முகக் கவசம் இலவசமாக வழங்கப்படும். மையங்களில் சானிடைசர் வைக்கப்பட்டிருக்கும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


latest tamil news


மேலும், ஒவ்வொரு மையங்களிலும், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணியில் ஈடுபட வாய்ப்புள்ளதால், அவர்களுக்கு யார் வாயிலாவது, கொரோனா பரவாமல் தடுக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

யாராவது பாதிக்கப்பட்டால், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, அருகில் உள்ள, கொரோனா வுக்கு சிகிச்சை தரும் மருத்துவமனைகளின் முகவரி, தொலைபேசி எண், சுகாதாரத்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண் உள்ளிட்ட பட்டியலை, பள்ளிகளில் ஒட்டிவைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திருத்தும் மையங்களில் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக் கவசம் இன்றி பணியில் ஈடுபட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிடுக்கிப்பிடி உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
27-மே-202012:58:45 IST Report Abuse
Visu Iyer விடை தாள் திருத்துவது போல திருத்தி எல்லோரையும் பாஸ் போட்டு விடுங்க.. அவ்வளவு தான்.. ஆல் பாஸ் என அரசிடம் வேண்டுகோள் வைக்க தேவையில்லை
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
27-மே-202010:29:30 IST Report Abuse
A.George Alphonse முக கவசம் இல்லாமல்ப ணியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிடுக்கிப்பிடி உத்திரவும் பிறப்பிக்க பட்டுள்ளது.பாவம் இந்த ஆசிரியர்களின் பரிதாப நிலை இப்போது.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
27-மே-202009:35:59 IST Report Abuse
Bhaskaran சென்னையை சேர்ந்த ஒரு மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கூறியது .சென்னை ஆசிரியர்கள் கிராமப்புறங்களிலிருந்துவரும் விடைத்தாள்களை கவனமாகவும் பெருந்தன்மையுடனும் திருத்துவார்களாம். கிராமப்புறமாணவர்கள் பயன் பெறவேண்டும் என்று .ஆனால் மாவட்டங்களிலிருந்துவரும் ஆசிரியர்கள் சென்னையின் விடைத்தாள்களை அப்படி திருத்துவது கிடையாது . அதனால்தான் மாவட்ட மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறார்கள் என்று. இதில் எவ்வளவு உண்மையோ தெரியவில்லை. ஆனாலொன்று மட்டும் உறுதி கிராமப்புறத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரும் பெரும்பாலான மாணவர்கள் முதல் செமஸ்டரில் தோல்வியடைவது கேள்விப்பட்ட ஒன்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X