சிங்கப்பூர் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும்

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சிங்கப்பூர் : கொரோனா தாக்கத்தால், இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சிங்கப்பூர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.



latest tamil news



சிங்கப்பூரில், கொரோனாவால், 32 ஆயிரத்து, 343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 23 பேர் பலி ஆகியுள்ளனர். அங்கு, ஏப்.,7ல் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், படிப்படியாக கடுமையாக்கப் பட்டன.இந்நிலையில், சிங்கப்பூர் வர்த்தம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 1998ல், ஆசிய நிதிச் சந்தை நெருக்கடியின் போது, சிங்கப்பூர் பொருளாதாரம், 2.2 சதவீதம் பின்னடைவைக் கண்டது.கடந்த, 2001ல் சர்வதேச வலைதள நிறுவனங்களின் சரிவின் போது, பொருளாதார வீழ்ச்சி, 1.1 சதவீதமாக இருந்தது.


latest tamil news



இந்நிலையில், கொரோனா தாக்கத்தால், நடப்பாண்டு, சிங்கப்பூர் பொருளாதார வளர்ச்சி, 4 - 7 சதவீதமாக பின்னடைவைக் காணும் என, மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய மதிப்பீட்டில் 1 - 4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இந்த வகையில், இருபது ஆண்டுகளுக்குப் பின், சிங்கப்பூர் பொருளாதாரம், மிக மோசமான சரிவை சந்திக்கும் என,எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஒரே இடத்தில் தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள், அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news



இதன் காரணமாக, கட்டுமானம், கப்பல் மற்றும் பொறியியல் துறைகளில் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது, நாட்டின் உற்பத்தியை பாதிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூரில், ஜூன், 2 முதல் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்த, அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
27-மே-202020:15:12 IST Report Abuse
Endrum Indian அது என்ன சிங்கப்பூர் பொருளாதாரம் பாதிப்பு??? உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கின்றது???
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27-மே-202008:34:02 IST Report Abuse
Natarajan Ramanathan பாம்பன் பாலம் கட்டுவதற்கு முன்பு ராமேஸ்வரம் டீக்கடைகளில் காலையில் ஆறுமணிக்கு ரயிலில் வரும் பாலுக்காக காத்திருப்பார்கள். அதுபோலத்தான் இன்றுவரை சிங்கப்பூர் நிலையை. பால், அரிசி, கோதுமைமாவு, காய்கறி, பழங்கள், கோழிக்கறி எதுவாக இருந்தாலும் மலேசியா, இந்தோனேஷியா, வியட்நாம் , நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்துதான் வரவேண்டும். குடிதண்ணீர்கூட மலேசியாவின் ஜோகர் பாரூவில் இருந்துதான் வருகிறது.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
27-மே-202006:57:44 IST Report Abuse
blocked user ஏற்கனவே பாதித்து விட்டது. இனி புதிதாக பாதிக்க அதிகம் இல்லை... சுருங்கிய பொருளாதாரத்துக்கு ஈடாக அரசு தனது நிதி ஆதாரங்களை விடுவித்து தொழில்களை ஊக்குவிக்க மும்மரமாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X