மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு 'நோட்டீஸ்'; கடன் தவணை சலுகை காலத்தில் வட்டி

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
SC, Supreme Court, RBI, banking, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, நோட்டீஸ்

புதுடில்லி : கடன் தவணை சலுகை காலத்தில் வட்டி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடன் தவணை சலுகை தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தத்தா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் விபரம்: மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கடன் தவணையை செலுத்த முதலில் மூன்று மாதங்களும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மேலும் மூன்று மாதங்களும் அவகாசம் அளித்துள்ளன.

ஆனால் இந்த அவகாச காலத்தில் வட்டி கணக்கிடப்பட்டு கடன் தாரரின் கணக்கில் சேர்க்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடன் தவணை செலுத்த சலுகை அளித்து விட்டு அக்காலத்திற்கான வட்டி வசூலிப்பது நியாயமற்றது சட்ட விரோதமானது. ஏராளமானோர் ஊரடங்கால் வேலை இழந்துள்ளனர்.


latest tamil news


இந்நிலையில் கடன் தவணை காலத்தில் செலுத்தப்படாத வட்டியை கணக்கிடுவது கூட்டு வட்டி போன்றது. இதனால் செலுத்த வேண்டிய கடன் அதிகமாகும். அத்துடன் தவணைக் காலமும் அதிகரிக்கும். எனவே கடன் தவணை சலுகைக் காலத்தில் வட்டி வசூலிக்க தடை விதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு 'நோட்டீஸ்' அனுப்ப அமர்வு உத்தரவிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
27-மே-202019:54:14 IST Report Abuse
J.Isaac Siva Thiagarajan அவர்களே இப்பொழுது நாட்டில் மக்கள் ஆட்சியா நடக்கிறது. இப்பொழுது ஆட்சிபுரிகிறவர்கள் சிரித்து பரபரப்பாக பேசி பேசி ஏழை நடுத்தர மக்களை கழுத்தறுத்து கொண்டிருக்கிறார்கள். கொரனோ அடுத்து வெட்டுக்கிளி.
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
27-மே-202017:18:41 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN மக்கள் ஆட்சியில் அதிகம் கோர்ட் தலையிடுவது அவ்வளவு உசிதமாக இல்லை. மற்றவழக்கு வியாஜியங்களை கவனித்து தீர்வு வழங்கினால் நல்லது மக்ளுக்கு. ஆட்சி செய்ய மக்கள் பிரநிதித்துவ நிர்வாகிகள் நிர்வாகம் செய்ய உள்ளனர் அடிக்கடி அரசினை எதிர்த்து கேள்வி கேட்பது விட்டு நீதித்துறையை நன்கு நிர்வகித்தால் பாராட்டலாம். அல்லது நீதித்துறையே நாட்டின் நிர்வாகத்தையும் பார்க்கலாம். தேர்தல் தேவையே இல்லை. அப்போதான் தெரியும் நிர்வாகத்தைப்பற்றி. வர வர மாடு மேய்ப்பவன் போல் அசம்பிளி மேலவை பாராளு மன்றத்திலும் நடந்து கொள்வதைப்பார்த்தால் இனி மக்களாட்சியே வேண்டாம் என் தோன்றுகிறது.
Rate this:
Cancel
Thirumal Kumaresan - singapore,இந்தியா
27-மே-202017:07:31 IST Report Abuse
Thirumal Kumaresan ஆம் இது தவறான செயல்தான்.மக்களிடம் வட்டி வசூலிக்க கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X