பொது செய்தி

இந்தியா

நகருக்கு அடியில் சாலை: நிதின் கட்கரி பாராட்டு

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
Nitin Gadkari, Gadkari, Chardham yatra, Chardham, Chamba tunnel,
நிதின் கட்கரி, கட்கரி, பாராட்டு

புதுடில்லி: 'சார்தாம்' எனப்படும் கங்கோத்ரி, கேதார்நாத், யமுனோத்ரி மற்றும் பத்ரி நாத்தை இணைக்கும் திட்டத்தின் கீழ், ஹிமாச்சலப் பிரதேசத்தில், சம்பா நகருக்கு அடியில், 1,443 அடி நீள சுரங்கப் பாதையை சிறப்பாக அமைத்த, பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலை அமைப்புக்கு, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர், நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்தார்.

சார்தாம் திட்டத்தின் கீழ், இந்த நான்கு முக்கிய வழிபாட்டுத் தலங்களை இணைக்க, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கப்படுகிறது. மிகவும் கடினமான சீதோஷ்ண நிலையிலும், யாத்ரீகர்கள் பயணம் மேற்கொள்ளும் வகையில், இந்த சாலை அமைக்கப்படுகிறது.

இந்த சாலை திட்டத்தின் கீழ், தேசிய நெடுஞ்சாலையில், ரிஷிகேஷ் - தராசு இடையே, ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சம்பா நகரில், சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது. அதிக மக்கள்தொகை கொண்ட சம்பா நகருக்கு அடியில், இந்தப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கப் பாதை அமைப்பதற்காக துளையிடும் பணிகள் முடிந்தன.


latest tamil newsஅதையொட்டி நடந்த நடந்த நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் பங்கேற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி கூறியதாவது: மிகவும் சிக்கலான இந்த சுரங்கப் பாதை அமைக்கும் பணி, கடந்தாண்டு ஜனவரியில் துவங்கியது. வரும், 2021, ஜனவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், திட்டமிட்டதற்கு முன்பாகவே முடிக்கப்பட்டுள்ளது.

மிகவும் மோசமான மண் தன்மையால், சம்பா நகரில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுப்பப்பட்டது. ஒரு சிறிய அதிர்வு கூட இல்லாமல், மிக குறுகிய காலத்தில், இந்த சுரங்கம் அமைக்கும் பணியை, பி.ஆர்.ஓ., திறம்பட செய்துள்ளது. இது மிகப் பெரிய சாதனையாகும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தபோதும், நாட்டின் வளர்ச்சிக்காக, இந்த அமைப்பினர் தங்களை அர்ப்பணித்து செயலாற்றியுள்ளனர். வரும், அக்டோபர் மாதத்தில், போக்குவரத்துக்காக இந்த சுரங்கப் பாதை திறந்து விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
27-மே-202021:29:05 IST Report Abuse
தல புராணம் என்னமோ இந்த ஆட்சியாளர்கள் மட்டும் தான் திட்டங்களை செய்வதாக சிரிப்பு மூட்டியிருக்கிறார்கள் சங்கிகள். ரோத்தங் பாஸ் குகை பாதை. 8.8 கிலோமீட்டர். 2010 இல் அடிக்கல் நாட்டி, 4 வருடங்களில் 2014 இல் 50% மைல்கல்லை தொட்டது முந்தைய அரசு. அதற்கு பிறகு 6 வருடங்கள் எடுத்து மீதியை முடித்து அதற்கு அடல் குகை ன்னு பேரை வெச்சி மெடல் குத்திக்கிட்டாக. இப்போ 400 மீட்டர் குகை, அடிக்கு 8.4 கோடி செலவழிச்சு தொறந்துட்டு மார்பில் குத்திக்கொள்கிறார்கள். சிரிப்பு தான் வருகிறது.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
27-மே-202020:02:23 IST Report Abuse
தல புராணம் அமேரிக்காவில் இதற்கு Road to nowhere அல்லது Pork Project என்று சொல்வார்கள். அந்த 12,000 கோடியை சம்பா நகரின் வளர்ச்சிக்கு செலவழித்து இருக்கலாம். குடிக்க தண்ணி இல்லை கொப்பளிக்க பன்னீர்.
Rate this:
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
27-மே-202019:36:42 IST Report Abuse
Raja ஆயிரக்கணக்கான மக்கள் கொரானாவில் செத்துகிட்டு இருக்காங்க. மக்களுக்கு நிவாரணங்கள் ஒழுங்கா செய்யல. இந்த ரோடு போடுறது தேவையா? அதையும் பீத்திக்கணுமா?ன்னு ஒரு கூட்டம் வரும்னு நினைச்சேன். ஏனோ சத்தமில்லாம இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X