பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவாணி குழாயை அடைக்கும் கேரளா: கோவை மக்கள் பாதிக்கும் அபாயம்

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
kerala dam, kerala news, kerala coronavirus, dams,
சிறுவாணி, கேரளா, கோவை, மக்கள், அபாயம், தமிழக அரசு, கொரோனா,

பேரூர்: 'கொரோனா' அச்சுறுத்தலை சாதகமாக்கியுள்ள கேரளா, சிறுவாணி அணையில் 'இன்டேக் டவர்' அருகில் உள்ள குழாயை அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

சிறுவாணி வனப்பகுதியில், 2018ம் ஆண்டு, ஜூலையில் தொடர் மழை பெய்தது. சாடிவயல் - அணை வரையிலான, 16 கி.மீ.,க்கு நிலச்சரிவு ஏற்பட்டது. தமிழக வனப்பகுதி சாலை சீரமைக்கப்பட்டது; கேரளாவில் சீரமைக்கப்படவில்லை.ஒப்பந்தப்படி, ஆண்டுக்கு கொடுக்கும், 10 கோடி ரூபாயுடன் சேர்த்து சாலையை சீரமைக்க, 26 கோடி ரூபாய் கேட்டது கேரள அரசு. அதில், ஓராண்டுக்கும் மேலாக இழுபறி நீடித்தது. இதனால், பாலக்காடு மாவட்டம் மண்ணார்க்காடு வழியாக, குடிநீர் வாரியத்தினர் சென்று வந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பரில், அச்சாலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. யாரும் செல்ல முடியாத நிலையில், அணை பாதுகாப்பு என்ற பெயரில், கேரள நீர்ப்பாசனத்துறை தண்ணீரை வெளியேற்றியது. அதனால், நிரம்பி வழிய வேண்டிய அணை, நிரம்பாமல் போனது.


அணையில் நடப்பது என்ன?



கடந்த சில நாட்களாக கேரள சாலை, மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படுகிறது. அதே சமயத்தில், நீர் உள்ளிழுக்கும் பகுதி (இன்டேக் டவர்) அருகில் உள்ள, வறட்சியில் கைக் கொடுக்கும் பழைய குழாயை மூடும் பணியும் நடக்கிறது. இப்பணி, நான்கு பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு, தீவிரமாக நடக்கிறது.இது வெளியில் தெரியாமல் இருக்க, கேரள வனத்துறை செக்போஸ்ட்களில் கண்காணிப்பு தீவிரமாகியுள்ளது. சில நாட்களுக்கு முன், தமிழக குடிநீர் வாரியத்தினர், வனத்துறையினர் சென்றபோது, 'கொரோனா' அச்சுறுத்தலை கூறி, திருப்பி அனுப்பியுள்ளனர். எனவே, இவ்விஷயத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


நீர்மட்டம் சரிவு




latest tamil news


'தற்போது, அணையின் நீர்மட்டம், 8.5 அடியாக சரிந்துள்ளது; நான்கு வால்வுகளில், மூன்றாவது வால்வு வரை தெரிகிறது. இதே நிலை நீடித்தால், ஜூன், 20ம் தேதி வரை மட்டுமே தாக்கு பிடிக்க முடியும்' என்கின்றனர் குடிநீர் வாரியத்தினர்.குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அணையில் மேற்கொள்ளும் பணிகள் குறித்து தகவல் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எவ்வித அறிவிப்பும் இன்றி, வறட்சி காலத்தில் கை கொடுக்கும் குழாய் பகுதியில் பணி நடக்கிறது. தகவலறிந்து சாடிவயல் வழியே அணைக்கு சென்ற போது, 'கொரோனா'வை கூறி, கேரள வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. இதே போன்று, 2014ம் ஆண்டிலும் முயற்சி நடந்தது. இது குறித்து, அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rathinakumar KN - Madurai,இந்தியா
27-மே-202021:00:43 IST Report Abuse
Rathinakumar KN இந்த தண்ணீர் விஷயத்தில் கேரளா, கர்நாடகா,ஆந்திரா மாநிலங்கள் தொடர்ந்து வஞ்சனை செய்து வருகிறார்கள். தமிழக அரசு டாஸ்மாக் தண்ணி நம்பி செயல் படுகிறது.
Rate this:
Cancel
Balaji Gopalan - Paramaribo ,சுரிநாம்
27-மே-202019:26:43 IST Report Abuse
Balaji Gopalan சேட்டன்களை நாட்டுக்கு திருப்பி அனுப்புவேன் என்று டுமீல் போராளிகளை வைத்து ஒரு அறிவிக்கை விடுங்கள் . தமிழ்நாட்டில் முப்பது சதவீதம் மக்கள் தொகை குறையும். உடனே தமிழகத்துக்கு எதிரான வேலைகளை குறைப்பார்கள் சேட்டன்மார்கள்
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
27-மே-202019:15:59 IST Report Abuse
natarajan s தமிழ்நாடு கம்யூனிஸ்ட் தலைவர்கள் மூலமாக கேரளா முதல்வருடன் பேச்சு நடத்த திரு ஸ்டாலின் முயற்சி செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X