கேரளாவுக்கு தெரியாமல் ரயில்கள் இயக்கப்படுகின்றன: பினராயி விஜயன்

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளா அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ரயில்களை அனுப்புவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: கேரளாவிடம் தெரிவிக்காமல் மஹாராஷ்டிராவிலிருந்து மேலும் ஒரு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் விவரங்களைப்
Kerala, Pinarayi Vijayan, Railway, kerala CM, coronavirus news, indian railways, Kerala Chief Minister Pinarayi Vijayan, 
 பினராயி விஜயன், கேரளா, முதல்வர், சிறப்பு ரயில், புலம்பெயர், தகவல்

திருவனந்தபுரம்: கேரளா அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ரயில்களை அனுப்புவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.latest tamil news


இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: கேரளாவிடம் தெரிவிக்காமல் மஹாராஷ்டிராவிலிருந்து மேலும் ஒரு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் விவரங்களைப் பெறுவதற்காக அதை ரத்துசெய்து அதன் பயணத்தை வேறொரு தேதிக்கு திட்டமிட அரசு தலையிட வேண்டும். தனிமைப்படுத்த ஏற்பாடு செய்ய மாநிலத்திற்கு வருபவர்கள் இணையதள போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் எங்கள் கொரோனா கட்டுப்பாட்டு முயற்சிகள் வீணாகிவிடும். எங்கள் மாநிலத்திற்கு ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே உள்ளது. அதாவது வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை ஏற்பாடு செய்வதற்காக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும், இது மாநிலத்திற்கு வரும் கேரள மக்களுக்கு எதிரானது அல்ல.


latest tamil news


பயணிகள் 'கோவிட் -19 ஜாக்ரதா போர்ட்டலில்' பதிவு செய்வது கட்டாயமாகும். வெளிநாட்டினர், வெளிமாநிலத்தில் இருந்து இங்கு வரும்போது மாநிலத்தில் சில ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியது அவசியம். நோய் பரவக்கூடிய பகுதிகளிலிருந்து மக்கள் வருகிறார்கள். இதனால் இயற்கையாகவே இங்குள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதுவரை மஹா.,வில் 72 பேர், தமிழகத்தில் 71 பேர், கர்நாடகாவில் 35 பேர் என அங்கிருந்து வந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து சுமார் 3.80 லட்சம் பேர் கேரளாவுக்கு வருவதற்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில் 2.16 லட்சம் பாஸ் வழங்கப்பட்டுள்ளது, இதுவரை 1,01,779 பேர் ஏற்கனவே கேரளா வந்துள்ளனர். அதேபோல், வெளிநாட்டிலிருந்து திரும்பி வர 1.34 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர், இதில் 11,189 பேர் மே 25 வரை கேரளா வந்துள்ளனர். இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathaiyyan - Kolkata,இந்தியா
27-மே-202020:33:03 IST Report Abuse
Loganathaiyyan ஆக மொத்தம் ஒன்னு நல்லா தெரியுது கேரள மேற்கு வங்காளம் ஒன்னு விட்ட அண்ணன் தங்கச்சி போலெ நடவடிக்கைகள் அவர்களது இயலாமையை இன்னொருவர் மீது தள்ளிவிடுவது. மோடி செய்வது தப்பு. என்னப்பா தப்பு அதன் தேர்வு என்ன. இல்லே மோடி தப்பு???என்ன தான் தப்பு அதெல்லாம் உனக்கு தெரியாது மோடி தப்பு??? கீறல் விழுந்த ரெக்கார்டு போல அதையே திரும்ப திரும்ப சொல்லி ஒரு வேலையும் செய்யாமே இந்து கோவில் சொத்துக்களை கொள்ளையடித்து கிறித்துவ முஸ்லீம் சங்கங்களுக்கு தாரை வார்த்து???
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
27-மே-202020:27:29 IST Report Abuse
Ram தமிழ்நாட்டுக்குள்ள திருடன் மாதிரி வந்து மருத்துவ கழிவை கொட்டுபவர்கள் பேசுகிறார்கள் , வெள்ளத்தின் போது அள்ளிக்கொடுத்த தமிழ்நாட்டுக்கு சிறுவாணி தண்ணியை அடைக்க இந்த விஜயனுக்கே தெரியும்
Rate this:
Cancel
Ku Su - மேலக்குண்டியூர்,இந்தியா
27-மே-202019:00:39 IST Report Abuse
Ku Su நமக்கென்ன சேட்டா மருந்து கழிவு எல்லாம் தமிழ்நாட்டுலயும் கர்நாடகாவிலும் கொட்டிக்கலாம், பங்களாதேஷ் ஆளுங்கள ரகசியமா மறைச்சு வெச்சுக்கலாம், அரிசி திருடினான் என்று ஒரு அப்பாவியை கொன்னே போடலாம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X