பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.51 லட்சத்தை தாண்டியது; 4,337 பேர் பலி

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
India, CoronavirusUpdate, DeathToll, coronavirus, death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.51 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 4,337 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,387 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்ட நிலையில், 170 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (மே.,27) காலை 9:15 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,45,380 ல் இருந்து 1,51,767 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,167 ல் இருந்து 4,337 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60,491 ல் இருந்து 64,426 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 83,004 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 6,387 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 170 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து 6வது நாளாக கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது.


latest tamil news




மாநில வாரியாக பாதிப்பு விவரம்


மாநிலம் - பாதிப்பு - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 54,758 - 1,792
தமிழகம் - 17,728 - 127
குஜராத் - 14,821 - 915
டில்லி - 14,465 - 288
ராஜஸ்தான் - 7,536 - 170
மத்திய பிரதேசம் - 7,024 - 305
ஆந்திரா - 3,171 - 57
கர்நாடகா - 2,283 - 44
தெலுங்கானா - 1,991 - 57
கேரளா - 963 - 6

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chakra - plano,யூ.எஸ்.ஏ
28-மே-202004:15:40 IST Report Abuse
chakra புள்ளிவிபரப்படி பஞ்சாப் நிர்வாகம் தான் சிறந்த நிர்வாகம் . புது தொற்றுகள் குறைந்து விட்டன கேரளாவில் திரும்ப அதிகமாகிவிட்டன . மற்ற மாநில அரசுகளை கலைத்து விடலாம் மத்திய அரசையும் சேர்த்து
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
28-மே-202000:02:26 IST Report Abuse
unmaitamil நேருகானின் சுயநலத்தால் தான் அவர் குடும்பம் இப்படி அழிந்து, இந்த நிலைக்கு வந்ததா ???
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
27-மே-202011:57:04 IST Report Abuse
sundarsvpr மகா பாரத யுத்தம் நடந்து முடிந்து மிஞ்சியது எட்டு ஜீவன்கள் மட்டும். அப்போது பகவான் கிருஷ்ணன் சாட்சியாய் பார்த்துக் கொண்டு இருந்தார். கொரோனா அலை இப்பொது இடைநிலை. இது முடிந்து மற்றுஒரு பயங்கர அலை உள்ளது. இந்த தகவல் உலக சுகாதார நிறுவனத்தால் கூறப்பட்டுள்ளது. ஒரு நிம்மதி சாவை விட குணமானவர்கள் அதிகம். இந்த நம்பிக்கையில் தான் உயிர் வாழ்கிறோம்.. உலகம் அழியும் வரை ஏத்திடநீச்சல்.தாங்கும் சக்தி உள்ளவரை. சக்திபெற பாடுபடவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X