பொது செய்தி

இந்தியா

ஒரு நாளைக்கு 1.1 லட்சம் மாதிரிகள் சோதனை: ஐசிஎம்ஆர் தலைவர்

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
ICMR, Coronavirus, coronavirus Testing,  covid 19 Samples, COVID-19, ஐசிஎம்ஆர், தலைவர், கொரோனா, வைரஸ், பரிசோதனை, மாதிரிகள், சோதனை

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பரிசோதனையில் நாள் ஒன்றுக்கு சுமார் 1.1 லட்சம் மாதிரிகள் சோதனையிடப்படுவதாக ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பல்ராம் பார்கவா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஜன., மாதத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் குறித்து சோதனையிட ஒரே ஒரு பரிசோதனை ஆய்வகம் தான் இருந்தது. பிப்., மாத முடிவில் 14 அரசு ஆய்வகங்களும், மார்ச் முடிவில் 125 அரசு மற்றும் 52 தனியார் ஆய்வகங்களும் இருந்தன. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 612 பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இதில் 430 அரசு ஆய்வகங்கள், 182 தனியார் ஆய்வகங்கள் ஆகும். இதனால் கொரோனா பரிசோதனை அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது ஒரு நாளைக்கு 1.1 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன.


latest tamil news



இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை, இந்தியாவில் குறைந்த அளவிலேயே இறப்பு விகிதம் இருப்பது மிகவும் நல்ல விஷயமாகும். ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறதா, இல்லையா என்பதைக் காட்டிலும், அதிலிருந்து அவர் பிழைத்து வர வேண்டும். குறைந்த அளவிலான இறப்பு விகிதத்துக்கு பல்வேறு அனுமானங்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி கூடுதலாக இருப்பது, சில ஊசிகளைப் போடுவது போன்ற இவையனைத்தும் வெறும் அனுமானங்கள்தான். இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் அதிகமாக உள்ளது. ஒரு லட்சம் மக்கள் தொகையில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் மற்ற நாடுகளை விட ஒப்பீட்டு அளவில் மிகவும் குறைவாகவே உள்ளோம். இவற்றில் நாம் திறம்பட செயல்பட்டு வருகிறோம்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
27-மே-202011:40:01 IST Report Abuse
sundarsvpr பரிசோதனை செய்வதில் கால விரயமும் பொருளாதாரம் பாதிப்பு அடைகிறது. இதனை தவிர்க்க உலகம் தயாராக வேண்டும். தொற்று ஏன் ஏற்படுகிறது? எதிலும் கலப்படம். நாலு சுவற்றில் அடங்கி கிடைப்பது. வீட்டில் சூரிய ஒளி காற்றோட்டம் இல்லாமல் எ.சி யில் இருப்பது. பொது சுகாதாரம் குறைவு. எப்பிடியும் வாழலாம் என்பதை விட இப்பிடித்தான் வாழவேண்டும் என்பது அவசியம். பொதுமக்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுளோம். கொரோனா இன்னொரு அலை உள்ளது வலுவானது என்ற செய்தியும் வந்துள்ளது. இதில் பட்டினியும் இருக்குமா என்பது கேள்வி?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X