பொது செய்தி

இந்தியா

தாராவி தமிழர்களை வரவேற்காத தமிழகம்

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
TN, Tamil nadu, dharavi, dharavi coronavirus, covid 19, tamil nadu coronavirus,
தமிழகம்,தமிழ்நாடு, தாராவி, மஹாராஷ்டிரா, கொரோனா, கொோரனாவைரஸ், கோவிட்

திருநெல்வேலி: ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவி, கொரோனா அச்சுறுத்தல் பிடியில் தவிக்கிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான, அங்கிருந்து ஏராளமானோர், கொரோனா அச்சத்தால், தமிழகத்தில் உள்ள சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு புறக்கணிப்பும், ஏமாற்றமும் தான் கிடைத்துள்ளது. இதனை அவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

மும்பையின் மையப்பகுதியாக தாராவி திகழ்கிறது. இந்த பகுதியில் கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. இங்கு மட்டும் 1,500க்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். இதனால், தங்களுக்கும் தொற்று ஏற்படும் என்ற அச்சத்திலும், வேலையிழப்பு, மோசமான சுகாதாரம் காரணமாகவும் அங்கிருந்து பலர் தமிழகத்தில் உள்ள சொந்த ஊர்களுக்கு வந்து கொண்டுள்ளனர். அவ்வாறு, அங்கிருந்து தமிழகம் வந்தவர்களில் 700 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பல இடங்களில் மும்பையில் இருந்து வந்தவர்களை பார்த்து தமிழகத்தை சேர்ந்தவர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால், அவர்களை ஊருக்குள் அனுமதிக்க பல கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், நெல்லை மாவட்டம் பணகுடி கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் தாராவி சென்றார். தற்போது 52 வயதாகும் அவர், கொரோனா அச்சத்தால் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். ஆனால், அவரை வரவேற்று அழைக்க யாரும் இல்லை.

இது தொடர்பாக ஜெயக்குமார் கூறுகையில், எனது நண்பர் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளார். அவரது உடலை கூட மனைவி மற்றும் குழந்தை பார்க்க முடியவில்லை. இது எனது குடும்பத்தினர் உட்பட வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என நினைத்தேன். இதனால், சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்தேன். எனது குடும்பம் மற்றும் 26 பேர் சேர்ந்து பஸ்சில் சொந்த ஊர் வர ரூ.1.60 லட்சம் செலவு செய்துள்ளோம். வள்ளியூர் வந்த நாட்கள் ஒரு நாள் அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்கியிருந்தோம். பின்னர் வீடுகளுக்கு சென்று தனிமைபடுத்தி கொள்ளும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், சொந்த கிராமத்திற்கு செல்வதற்கு உகந்த சூழ்நிலை இல்லை. இதனால், கிராமத்திற்கு வெளியே உள்ள நண்பரின் கோழிப்பண்ணையில் வசித்து வருகிறேன் எனக்கூறினார்.


latest tamil news
அதேபோல் தாராவியில் இருந்து திரும்பிய பள்ளிகுளம், காவல்கிணறு, நாங்குநேரிக்கு திரும்பியவர்களுக்கு, அவமானமும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ''நாங்கள் தேவையில்லாதவர்கள் அல்லது கொரோனாவை கொண்டு வந்தவர்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ளோம். இதனை பாகுபாடு என சொல்வதை தவிர வேறு ஏதுவுமில்லை'' என சிலர் வேதனையுடன் தெரிவித்தனர்.


மும்பையில் வசிக்கும் சிலர் மோசமான சூழ்நிலையில் வசிக்கின்றனர். தாராவியில் வசிக்கும் 80 சதவீதம் பேர், பொக்து கழிப்பறையை தான் பயன்படுத்தி வருகின்றனர் என மும்பையில் வசிக்கும் கடலூரை சேர்ந்த மஞ்சுளா கதிர்வேல் என்ற வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள பிரான்சிஸ் என்ற கூரியர் நிறுவனத்தின் ஊழியர் கூறுகையில், குடிசை பகுதியில சமூக இடைவெளி என்பது சாத்தியமில்லை. கொரோனா பாதித்தவர்களை, சுகாதார அதிகாரிகள் அழைத்து சென்று விடுகின்றனர். ஆனால், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தனிமைபடுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால், பொது கழிப்பறை என்பதால், ஒருவர் பின் ஒருவராக தான் அதனை பயன்படுத்த வேண்டும். இதனால், கொரோனா அதிகரித்து வருகிறது என்றார்.

தாராவியை சேர்ந்தவர்களை அடுத்த இரண்டு மாதத்திற்கு வேலைக்கு வர வேண்டாம் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக தாராவியில் நடக்கும் குடிசை மறுசீரமைப்பு திட்டத்தில் பணிபுரிந்து வரும் வேல்முருகன் என்பவர் கூறுகையில், எனது மைத்துனர் ஒப்பந்தம் அடிப்படையில் மும்பை விமான நிலையத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ஆனால், ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் விமான சேவை துவங்கியது. ஆனால், அவரை வேலைக்கு வர வேண்டாம் என ஒப்பந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. என தெரிவித்தார்.


ஓட்டல் ஒன்றில் காசாளராக பணிபுரிந்து வரும் சிவக்குமார் என்பவர் கூறுகையில்,
நாங்கள் சொந்த ஊர் திரும்ப விரும்புகிறோம். இதற்காக குடும்பத்தினருடன் தமிழகம் வர இபாஸ் விண்ணப்பித்தேன். ஆனால், இரண்டு முறை அது நிராகரிக்கப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
03-ஜூன்-202003:14:22 IST Report Abuse
NicoleThomson இது நாள் வரை இவர்களது சொத்தினை இலவசமாக அனுபவித்து வந்தவர்கள் அது முடியாத பட்சத்தில் எல்லாவிதத்திலும் தொந்திரவு கொடுப்பாங்க
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
27-மே-202020:46:26 IST Report Abuse
sankaseshan இப்போது புரிந்ததா தமிழ்நாட்டு அரசியலை மும்பைக்கு கொண்டு சென்று திரவிஷர்களுக்கு சாமரம் வீசினீர்கள் இப்போ ஒரு பயலும் கண்டுகொள்ளாமல் ஒதுக்குகிறான் எதிர்காலத்தில் சூதனமாக இருக்கவும்
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
27-மே-202020:38:38 IST Report Abuse
adalarasan கொரோனா தொற்று உள்ளவர்கள் அங்கேயே மருத்துவம், தனிமை படுத்திக் கொள்ள வேண்டும்.சொந்த ஊர்களுக்கு செல்ல கூடாது அதற்காகத்தான், இங்கிருந்து சென்ற, வட மாநிலவர்களுக்கும், அறிகுறி இருக்கா என்று சோதனைக்கு பின்தான், செல்ல அனுமதிக்கிறார்கள் ஆனால் மஹாராஷ்டிரா, மாநில அரசு எல்லோரையும் ,மொத்தமாக, சோதனை இன்றி, அனுப்புகிறது, வெளி மாநிலவர்தகர்க்கு, சிகிச்சையும் பாரபட்சம், காண்பிக்கிறது வெளியேற்றுகிறது மோசமான சிவசேனா, அரசு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X