கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜெ., இல்லத்தை முதல்வரின் இல்லமாக மாற்றலாம்: ஐகோர்ட்

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (45)
Share
Advertisement
AIADMK, Jayalalithaa, Madras High Court, chief minister Jayalalithaa, tamil nadu news,
அ.தி.மு.க,ஜெயலலிதா, வேதாநிலையம், இல்லாம், சென்னைஉயர்நீதிமன்றம், சென்னைஐகோர்ட், ஐகோர்ட், உயர்நீதிமன்றம், தீபக், தீபா, நினைவில்லம்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றலாம் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 900 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி அ.தி.மு.க.,வைச் சேர்ந்த புகழேந்தி ,ஜானகிராமன் மனு தாக்கல் செய்தனர். மனுவை நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. விசாரணையின் போது ஜெ.,வின் சகோதரரின் மகள் தீபா , மகன் தீபக் ஆகியோரை வழக்கில் விசாரித்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
ஜெ.,வின் சொத்துகளுக்கு வாரிசுகள் எனக்கூறி இருவர் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வருமான வரி பாக்கி உள்ளதா என்பதை அறிய வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை பிரிவும் வழக்கில் சேர்க்கப்பட்டு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்த வேண்டியுள்ளதால், ஜெ.,வின் சொத்துகள் சிலவற்றை முடக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை பதில் அளித்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்திருந்தனர்.


latest tamil news
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றலாம். ஒரு பகுதியை மட்டும் நினைவில்லமாக மாற்றலாம். மக்கள் பணத்தில் தனியார் சொத்துகளை வாங்கினால், முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும். இதனால், வேதா நிலையத்தை முழுமையாக நினைவில்லமாக மாற்றுவது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்.


ஜெ., சொத்துகள் மீது தீபா,தீபக், இரண்டாம் நிலை வாரிசுகள். அவர்களுக்கு சொத்தில் உரிமை உண்டு. ஜெ.,வின் சொத்துகளின் ஒரு பகுதியை அறக்கட்டளை கொண்டு நிர்வகிக்கலாம். இந்த பரிந்துரை குறித்து, எட்டு வாரங்களில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், புகழேந்தி, ஜானகிராமன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
27-மே-202021:29:09 IST Report Abuse
Easwar Kamal ஏனுங்க எடபடியாருக்கும் போயஸ் வீடு மேல ஆசை இருக்கும் போல. அந்த ஒண்ணுங்கோ யாரு எல்லாம் ஆசை பட்டங்களோ எல்லாருக்கும் ஜெயலில் கலி உருண்டைதான் கிடைச்சு இருக்கு. பார்த்து நடந்துக்கோங்க
Rate this:
Cancel
உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி - உண்மையூர் ,இந்தியா
27-மே-202021:16:59 IST Report Abuse
உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி நான் ஏதாவது கருத்து கூறினால் அது நீதிமன்றத்தை களங்கப்படுத்திவிடும் என்பதால் கப் சிப்...
Rate this:
Cancel
27-மே-202019:45:21 IST Report Abuse
ஆரூர் ரங் வாரிசு யாரென தீர்ப்பு சொன்னால் போதுமே. நினைவில்லம் ..முதல்வர் இல்லம் ஆலோசனையை யார் கேட்டார்கள்? எட்டு வார நோட்டீஸ் இன்னும் அனாவசியம் .
Rate this:
மனதில் உறுதி வேண்டும் - மதராஸ்:-),இந்தியா
27-மே-202020:57:06 IST Report Abuse
மனதில் உறுதி வேண்டும் attorney general solittar...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X