பொது செய்தி

இந்தியா

ஊரடங்கு சமயத்தில் 196 புலம்பெயர் தொழிலாளர்கள் சாலை விபத்துகளில் உயிரிழப்பு

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Migrants, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, Road Accidents, Lockdown, Survey, புலம்பெயர், தொழிலாளர்கள், விபத்து, ஊரடங்கு, உயிரிழப்பு

புதுடில்லி: மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை நடந்த சாலை விபத்துகளில் 196 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர், 866 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று சேவ் லைப் அறக்கட்டளையின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு போடப்பட்டதால், பிற மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால், ஆயிரக்கணக்கானோர் சாலை மார்க்கமாக நடந்து சொந்த ஊர் திரும்பினர். சிலர் சைக்கிள்கள், சரக்கு வாகனங்களில் ஊர் திரும்பும் முயற்சிகளில் இறங்கினர். அவ்வாறு புறப்பட்ட தொழிலாளர்களில் விபத்துக்களில் சிக்கி இதுவரை 196 பேர் உயிரிழந்துள்ளதாக சேவ் லைப் அறக்கட்டளை ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே சமயத்தில் நடந்த 1,346 விபத்துகளில் தொழிலாளர்களையும் சேர்த்து மொத்தம் 601 பேர் உயிரிழந்துள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் தவிர, 35 அத்தியாவசிய பணியாளர்களும் இந்த காலகட்டத்தில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.


latest tamil news


ஊரடங்கின் போதும் நமது சாலைகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை இந்நிகழ்வுகள் காட்டுகின்றன. விபத்தின் தீவிரத்தன்மை ஊரடங்கிற்கு முன்பு இருந்ததை போலவே தற்போதும் உள்ளது. விபத்துக்களை தவிர்க்க வேகம் மற்றும் ஓட்டுநரின் களைப்பு முக்கிய காரணம் என அவ்வறக்கட்டளையின் நிறுவனர் கூறியுள்ளார். சாலைகளில் உள்ள அனைத்து தவறுகளையும் சரிசெய்ய இரண்டு மாத ஊரடங்கு பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். சாலைகளில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி பல அறிக்கைகள் நெடுஞ்சாலை துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவை சரி செய்யப்பட்டவுடன், விபத்து எண்ணிக்கை குறைந்துவிடும் என்று சாலை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Muthu - chennai,இந்தியா
27-மே-202021:37:11 IST Report Abuse
Narayanan Muthu அரசின் பதிவேட்டில் உள்ள கணக்கு மட்டுமே இங்கு செய்தியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆப் தி ரெகார்ட் எவ்வளவோ. கோரோனோ மரணத்தையே மறைக்கும் அரசுக்கு இது ஒன்றும் சவாலான விஷயம் அல்ல.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
27-மே-202014:55:54 IST Report Abuse
sundarsvpr கொரோனா பாதிப்பில் லட்சக்கணக்கில் மரணம். யார் பொறுப்பு. விதிதான். புலம் தொழிலார்கள் சாவிற்கு யார் காரணம். இவர்கள் சொந்த பந்தங்கள் அவர்கள் ஊரில் எவ்வாறு இருக்கிறார்கள் என்ற ஆர்வத்தில் நடை பயணம் செய்தனர். ஆர்வம் மிகுதியால். யார் தடுக்க இயலும்? இதுவும் விதி. எந்த தவறுகளுக்கும் காரணம் விதிதான். நீதிமன்றம் அரசை கண்டித்தால் அதுவும் விதிதான். முடிவில்லா இயற்கை நியதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X