பொது செய்தி

தமிழ்நாடு

அதிநவீன தேஜஸ் மார்க்-1 விமானம் சூலூர் படைப்பிரிவில் சேர்ப்பு

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
தேஜஸ், போர்விமானம், கோவை, சூலூர், விமானப்படை, தளபதி , பதூரியா, இந்தியா, Second squadron, Tejas fighter jets,Indian Air Force, Sulur air base, Coimbatore, tamil nadu

கோவை: மேம்படுத்தப்பட்ட தேஜஸ் மார்க் 1 ரக போர் விமானம், கோவை, சூலூர் விமானப்படை தளத்தில், 18 வது ஸ்குவாட்ரன் படைப்பிரிவில், சேர்க்கப்பட்டது. இதனை விமானப்படை தளபதி பதூரியா ஒப்படைத்தார்.


latest tamil news



கோவை, சூலூரில் விமானபடைதளம் உள்ளது. இங்கு தேஜஸ் போர் விமானங்கள் 16 கொண்ட படைப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தேஜஸ் போர் விமானத்தில் மேம்படுத்தப்பட்ட தேஜஸ் மார்க் -1 போர் விமானத்தை எச் ஏஎல், டிஆர்டிஓ ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. இது முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 4ம் தலைமுறை போர் விமானம் ஆகும். சுமார் 7 டன் எடை கொண்ட இந்த போர் விமானம், ஒலியின் வேகத்திற்கு இணையாக அதிவேகத்தில் செல்லக்கூடியது.


latest tamil news


Advertisement



latest tamil news



இந்நிலையில்,சூலூர் விமானபடை தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் மேம்படுத்தப்பட்ட தேஜஸ் மார்க்1 போர் விமானத்தை, 18 வது ஸ்குவாட்ரான் படைப்பிரிவிடம் விமானப்படை தளபதி பதூரியா ஒப்படைத்தார். இதற்கான சாவியை, தென்னிந்திய தலைமை தளபதி அமித் திவாரியிடம் ஒப்படைத்தார். முன்னதாக, இந்த விமானத்தை பதூரியா இயக்கி பார்த்தார். இதன் பின்னர் பதூரியா பேசும் போது, அடுத்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில், இந்திய விமானப்படை முதலிடத்தில் இருக்கும் எனக்கூறினார்.


latest tamil news




latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா இந்தியாவில் உள்ள அணைத்து மத பிரதிநிதிகளும் செய்த பூஜை. இந்த நாட்டின் மேல் போர் தொடுக்க நினைப்பவன் உண்மையில் கொடுங்கோலன்.
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
27-மே-202016:34:08 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X