60 நாளில் 19.23 கோடி உணவுப் பொட்டலங்களை விநியோகித்த பாஜ.,

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து 60 நாளில் நாடு முழுவதும் 19.23 கோடி உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டதாக பாஜ., தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், அத்யாவசிய சேவைகள் தவிர அனைத்து சேவைகளும் தடைப்பட்டன. இதனால், கூலித் தொழிலாளர்கள், அன்றாடம் உழைத்து உண்ணும் ஏழைகள்
BJP, corona, coronavirus, covid-19, corona in india, corona update, coronavirus update, Food Packets, lockdown, பாஜ., பாஜக, உணவுப்பொட்டலங்கள், விநியோகம், மாஸ்க்

புதுடில்லி: ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து 60 நாளில் நாடு முழுவதும் 19.23 கோடி உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டதாக பாஜ., தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், அத்யாவசிய சேவைகள் தவிர அனைத்து சேவைகளும் தடைப்பட்டன. இதனால், கூலித் தொழிலாளர்கள், அன்றாடம் உழைத்து உண்ணும் ஏழைகள் உணவின்றி தவித்தனர். இதனால், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என பாஜ.,வினருக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வலியுறுத்தியிருந்தார்.


latest tamil news


இதனையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கினால் உணவின்றி தவித்தவர்களுக்கு பாஜ.,வினர் உணவுப்பொட்டலங்களையும், உணவுப் பொருட்களும், பொதுமக்களுக்கு மாஸ்க்குகளும் விநியோகித்தனர். இது தொடர்பான புள்ளி விவரத்தை பாஜ., தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஊரடங்கு தொடங்கிய மார்ச் 25 முதல் மே 23 வரையிலான காலக்கட்டத்தில் அனைத்து தரப்பினரையும் சேர்ந்த 5 கோடி மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்க திட்டமிடப்பட்டது.


latest tamil news


ஆனால் இந்த 60 நாட்களில் 19.28 கோடி உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், 5 கோடி மக்களுக்கு மாஸ்க் அளிக்கத் திட்டமிட்டு, 5.2 கோடி பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. 4.86 கோடி எண்ணிக்கையிலான உணவுப்பொருட்களும் தேவையானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இப்பணியில் 8.23 லட்சம் பாஜ.,வினர் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
27-மே-202023:02:05 IST Report Abuse
Krishna ALL ROSY ANNOUNCEMENTS of BJP Dictators Will Remain Only in PapersAll LIES TO CHEAT Supreme People (with Power Misusing Officials & Media). NOT GOT 01RE in Cash & Kind (People's Referendum with Manual Ballot-papers will Prove). Indian's Economy, Already Destroyed by Idiotic Sadist Anti-People, Anti-Nation, Aadhar Mental Dictators, is Further Destroyed by Corona Lockdowns-(Faciltated China By Destroying Only Competitor India-Tons of Crores-Commissions). While, In35dian Investors Fear SpyMasters & Looting Taxes-Commisions, Foreign Black Money (incl. Rerouted BJP Mafia’s) Comes Freely. Remember-Corrupt Money Never Caught (Commissions All Possible without Aadhar), Except Opponents.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
27-மே-202022:46:02 IST Report Abuse
Rajas கலகலப்பு படத்தில் ஹீரோவை சந்தானம் சாப்பிட கூட்டி போவார். அப்போது புலியை முறத்தால் விரட்டிய காமடி சீனில் ஹீரோ இதையெல்லாம் நம்பறா மாதிரியா இருக்கும் என்பார். அதற்க்கு சந்தானம் "நானும் தான் நம்பவில்லை. நம்பினால் தான் சாப்பாடு என்று சொல்லிவிட்டார்கள். நீங்கள் எப்படி". என்பார்.
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
27-மே-202022:27:01 IST Report Abuse
பாமரன் இந்த பணிகளை யார் கண்ணிலும் படாமல் ரகசியமா செஞ்சிருப்பாங்க போல தமிழக பாஜகவில் ஒரு கோடி பேரை உறுப்பினர் ஆக்கிய மாதிரி.......???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X