பொது செய்தி

இந்தியா

‛இந்தியாவில் கொரோனாவுக்கு 18,000 பேர் உயிரிழக்கலாம்'

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, India, Public Health Expert, இந்தியா, கொரோனா, வைரஸ், உயிரிழப்பு, பலி

புதுடில்லி: இந்தியாவில் ஜூலை முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் அடைய கூடுமெனவும், தொற்றால் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரை உயிரிழப்பர் எனவும் தொற்று நோயியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதாக லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் பேராசிரியர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா இறப்பு ஒற்றை இலக்கத்தில் இருக்க வாய்ப்பில்லை எனவும், ஜூலை துவக்கத்தில் உச்சத்தை அடையுமெனவும் தெரிவித்தார். பல்வேறு ஆய்வு மாதிரிகளின் முடிவுகள் மற்றும் மற்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு எப்படி உச்ச நிலையை அடைந்து பின்னர் குறைந்தது என்பதை கண்காணித்ததன் அடிப்படையில் இதனை கூறியுள்ளார்.


latest tamil news


இந்தியாவில் சுமார் 4 முதல் 6 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர். அதில் சராசரியாக 3 சதவீதம், அதாவது 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் பேர் உயிரிழப்பர் என அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த துணை பேராசிரியர் தெரிவித்துள்ளார். பல்வேறு காரணங்களால் இந்தியாவில் கொரோனா முடிந்த பின்பே, இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கான காரணம் தெரியவருமென்றார். குறிப்பிட தரவுகளின் இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. தன்னை பொறுத்தவரை, வயது கட்டமைப்பை பொறுத்தவரை இத்தாலி அல்லது அமெரிக்காவை விட இந்தியாவில் இளைஞர்கள் அதிகமாக இருக்கின்றனர் என பப்ளிக் ஹெல்த் பவுண்டேஷன் ஆப் இந்தியா அமைப்பின் துணை தலைவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news


வயது ஒரு முக்கியமான ஆபத்தான காரணியாக உள்ளது. வயதானவர்கள் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமுள்ளது. மற்ற காரணங்களாக, உலகளாவிய பி.சி.ஜி தடுப்பூசி, மலேரியா நோய், மீண்டும் தொற்றுநோய்களின் வெளிப்பாடு, சுகாதாரமற்ற சூழலால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, வெப்பநிலை ஆகியவை கூறப்படுகிறது. ஆனால் அவற்றின் பங்கு குறித்து தெளிவான ஆதாரம் இல்லை.


தெற்காசியாவில் இறப்பு விகிதம் குறைவு:

தெற்காசியா முழுவதும் இலங்கையில் இருந்து இந்தியா, சிங்கப்பூர், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் மலேஷியா நாடுகளில் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு ஏறக்குறைய ஒரே மாதிரியான இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது. இந்த நாடுகளில் ஏன் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என கூறுவது கடினமான ஒன்று. ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா போன்று இல்லாமல், இந்த நாடுகளில் தொற்று பரவ துவங்கியவுடன் ஊரடங்கை அமல்படுத்தியதால், பரவல் குறைந்திருக்கலாமென ஐதராபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் ஹெல்த் இயக்குனரும், பேராசிரியருமான ஜி.வி.எஸ் மூர்த்தி தெரிவித்துள்ளார்.


latest tamil news


மேலும் 60 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் இறக்க வாய்ப்பு அதிகம் இருப்பதற்கு இந்தியா மற்றும் உலகளவில் சான்றுகள் உள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றால் இறந்தோரில் 50 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆவர். மக்கள்தொகை அடிப்படையில் ஒப்பிடுகையில், 60 வயதுக்கு மேற்பட்டோர் அமெரிக்காவில் 22.4 % ஆகவும், இந்தியாவில் 9.9 % ஆகவும், பிரிட்டனில் 24.1 % பேரும், இத்தாலியில் 29.4 % பேரும் உள்ளனர். ஆரம்பகட்ட ஊரடங்கு காரணமாக, இந்தியாவில் நிரீழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற அதிக ஆபத்து கொண்டவர்கள் காப்பாற்றப்பட்டனர். குறைந்த இறப்புக்கு இதுவும் காரணமாக இருக்காலமெனவும் அவர் தெரிவித்தார்.

பதினைந்து நாட்களில் டெங்கு, மலேரியா மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அழிவை உருவாக்கத் தொடங்கும் . தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் சுய பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து கொரோனா தொற்றில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களே, பாதகமான விளைவுகளை குறைப்பதற்கான மந்திரங்கள் எனவும் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
27-மே-202022:51:13 IST Report Abuse
venkatan கொரோனா ஒரு புரியாத புதிர்.ஆதலால் எல்லோரும் ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.தாய்,தந்தை,மகன்,மகள், மனைவி,தாத்தா,பாட்டி போன்றோரை தவறவிட்டவர்களுக்கு மனிதனிடத்தில் ஆறுதல் வார்த்தைகள் அறவே இல்லை. கடவுள் அனைவரையும் காப்பாராக. இந்த ப் பேரழிவிற்கும்,துன்பங்களுக்கும் என்ன பிராயச்சித்தம்?கடவுளிடம் சரணடைந்து விடுவதுதான்.
Rate this:
Cancel
Covim-20 - Soriyaar land,இந்தியா
27-மே-202019:24:09 IST Report Abuse
Covim-20 பரப்பிவிட்ட தப்லீக்குங்க... ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு ஏப்பம் விட்டு ஹாயா.. ஜாலியா இருக்காங்க...
Rate this:
Cancel
27-மே-202019:11:57 IST Report Abuse
நக்கல் இதுவும் இந்தியாவில் பல லட்சம் பேர் இறப்பார்கள் என்று மார்ச் மாதத்தில் வெளிநாட்டு பத்திரிகை சொன்னதையும் ஒரே மாதிரி பார்க்கவேண்டும்... வழக்கம் போல தேசவிரோதிகளுக்கு இது ஒரு சுவையான செய்தி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X