தவறான தகவல் தருவதா: டுவிட்டர் - டிரம்ப் மோதல்

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020
Share
Advertisement
potus, donald trump, Donald, Trump, tweet, Twitter, election, டிரம்ப், டுவிட்டர், டோனால்ட் டிரம்ப், ,

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்ப், பதிவிட்ட இரண்டு டுவிட்களை, ஆய்வு செய்து, டிரம்ப் கூறியது தவறானவை என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், கோபமடைந்த டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல், பேச்சு சுதந்திரத்தில் தலையிடுகிறது என டுவிட்டர் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

டிரம்ப் டுவிட்டரில், நேற்று அடுத்தடுத்து இரண்டு பதிவுகளை வெளியிட்டார்.
அதில், தபால் ஓட்டுச் சீட்டுகள் என்பது மோசடி. இது மோசமான தேர்தலுக்கு வழிவகுக்கும். ஓட்டுப்பெட்டிகள் திருடி செல்லப்பட்டு, போலியான ஓட்டுச்சீட்டுகள் போடப்படலாம். சட்டவிரோதமாகவும் அச்சிடப்பட்டுபோலி கையெழுத்து போடவும் முடியும்.
கலிபோர்னியாவில் வசிக்கும் அனைவருக்கும், ஓட்டுச்சீட்டுகளை, கவர்னர் அனுப்பி வருகிறார்.



அவர்கள் யார், அங்கு எப்படி வந்தார்கள் என்பது பற்றி கவலைப்படவில்லை. அவர்களில் பெரும்பாலானோர் கடந்த காலங்களில் நடந்த தேர்தலில் ஓட்டு போடவில்லை. எப்படி யாருக்கு போடப்போகிறோம் என்ற எண்ணமும் இல்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது தேர்தலில் மோசடிக்கு வழிவகுக்கும். என தெரிவித்திருந்தார்.




இது குறித்து ஆய்வு செய்த டுவிட்டர் நிறுவனம் ஆய்வு செய்து, அவரது டுவிட்டருக்கு கீழ் தபால் ஓட்டுச்சீட்டுகள் குறித்து கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் என லிங்க்கை இணைத்தது.

அதில், கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் தபால் ஓட்டுகள் குறித்து கலிபோர்னியா கவர்னர் தெரிவித்த உடன், மோசடி நடக்கும் என டிரம்ப் குற்றம்சாட்டினார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என சிஎன்என், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்டவை தெரிவித்துள்ளன. வாக்காளர் மோசடி செய்வது அரிதாக நடக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தபால் ஓட்டுகள் மூலம் தேர்தலில் மோசடி நடக்கும் என டிரம்ப் தவறான தகவலை தெரிவித்துள்ளார் தபால் ஓட்டுச்சீட்டுகள் மூலம் வாக்காளர் மோசடி செய்வதற்கு தொடர்பில்லை என உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது. எதை பற்றியும் கவலைப்படாமல், கலிபோர்னியாவில் உள்ள அனைவருக்கும் தபால் ஓட்டுச்சீட்டுகளை கவர்னர் அனுப்பி வருவதாக தவறான தகவலை தெரிவித்துள்ளார் எனவும் டுவிட்டர் தெரிவித்துள்ளது.


latest tamil news




இதனால் கோபமடைந்த டிரம்ப், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், டுவிட்டரில் வெளியிட்ட மற்றொரு பதிவில்,
2020 அதிபர் தேர்தலில் டுவிட்டர் தலையிடுகிறது. அவர்கள், பொய் செய்திகளை வெளியிடும் சிஎன்என், வாஷிங்டன் போஸ்ட் போன்றவை ஆய்வின் அடிப்படையில், தபால் ஓட்டுச்சீட்டுகள் மூலம் தேர்தலில் மோசடி நடக்கும் என நான் கூறுவது பொய் என கூறுகிறது. இது பேச்ச சுதந்திரத்தை தடுக்கிறது. நான் அதிபராக இருக்கும் வரை அதனை அனுமதிக்க மாட்டேன். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X