பொது செய்தி

இந்தியா

பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ.50 லட்சம் கோடி தேவை: நிதின் கட்கரி

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Nitin Gadkari, Economy, Disruption, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, india, பொருளாதாரம், சீர்படுத்த, 50_லட்சம்_கோடி, நிதின் கட்கரி,

புதுடில்லி: நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ.50 லட்சம் கோடி வரை தேவைப்படுகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசால் பாதிப்படைந்த பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு, ரூ.20 லட்சம் கோடி அளவிற்கு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்தது. இதனால், சுமார் 45 லட்சம் நிறுவனங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: மார்ச் மாதத்தில் இருந்து முடங்கிக் கிடக்கும் சுமார் 6 லட்சம் சிறு, குறு நடுத்தர தொழில்களை சீர்படுத்த வேண்டும். சுமார் 25 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில்களை சீரமைக்க நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.


latest tamil news


இந்த நிறுவனங்களுக்கு நிலுவை தொகையை 40 நாட்களுக்கு பிறகு செலுத்துவதற்கு வழிகளை செய்துள்ளோம். பெரும்பாலான தடைகளும் அகற்றப்பட்டுள்ளன. சந்தையில் பணப்புழக்கம் இல்லை. பொருளாதாரத்தின் சக்கரம் மீண்டும் செயல்படுவதற்கு நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ.50 லட்சம் கோடி வரை தேவைப்படுகிறது. மத்திய அரசில் இருந்து ரூ.20 லட்சம் கோடி, மாநில அரசுகளில் இருந்து ரூ.20 லட்சம் கோடி, பொது மற்றும் தனியார் முதலீடுகளில் இருந்து ரூ.10 லட்சம் கோடி தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aaaaa - Bbbbbb,இந்தியா
28-மே-202017:49:40 IST Report Abuse
Aaaaa உங்கள் ஆட்சியில் எல்லாமே கடலில் கரைத்த பெருங்காயம்தான்
Rate this:
Cancel
28-மே-202006:12:22 IST Report Abuse
நல்லவன் வரிச் சுமையை மக்கள் மீது திணிப்பது தானே வழக்கம்.. அப்பாவி அவர்கள் தானே.. கள்ளப்பணம் கருப்பு பணம் வெளியே வர வேண்டும். வரி ஏய்ப்பு செய்பவர்களிடம் வசூல் செய்க
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
27-மே-202022:28:36 IST Report Abuse
J.Isaac கந்துவட்டி வரி வசூல் பணம் எங்கே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X