இந்தியா -சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப்

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
Donald Trump, India, Trump, china, united states, usa, america,  border dispute, trump, இந்தியா,டிரம்ப்,டோனால்ட் டிரம்ப், டொனால்ட் டிரம்ப்,  சீனா, எல்லைபிரச்னை, மத்தியஸ்தம்,   அதிபர்டிரம்ப்,presidenttrump, mediate,

வாஷிங்டன்: எல்லையில், இந்தியா சீனா இடையே ஏற்பட்டுள்ள மோதலால் பதற்றம் நிலவுகிறது. இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


இந்திய - சீன எல்லை பகுதியில், கடந்த சில நாட்களாகவே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்திய - சீன எல்லையில் இருந்த சீன வீரர்கள் சிலர், காஷ்மீர் அருகே உள்ள கிழக்கு லடாக் பகுதிக்குள், கடந்த, 5ம் தேதி அத்துமீறி நுழைந்தனர்.அவர்களை நம் வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இரு தரப்புக்கும் கை கலப்பு ஏற்பட்டது. இதில், இரு தரப்பிலும் சில வீரர்கள் காயம் அடைந்தனர். இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் தலையிட்டதை அடுத்து, எல்லையில் அமைதி திரும்பியது.இதைத் தொடர்ந்து, நம் நாட்டின் வட கிழக்கு மாநிலமான சிக்கிமிலும், இந்திய - சீன எல்லை பகுதி யில் இதுபோன்ற ஒரு நிகழ்வு ஏற்பட்டது.இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பின், இந்திய எல்லை பகுதிக்கு மிக அருகில், சீன ராணுவ ஹெலிகாப்டர் அத்துமீறி பறந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. இதற்கு பதிலடியாக, நம் விமானப் படை ஹெலிகாப்டரும், அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.
இதற்குப் பின், எல்லை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு தரப்பும், வீரர்களை குவித்து வருகின்றன. காஷ்மீரின் லடாக் பகுதியை ஒட்டிய எல்லையில், தங்கள் கட்டுப்பாட்டு பகுதியில், 5,000க்கும் அதிகமான வீரர்களை, சீன ராணுவம் தயார் நிலையில் நிறுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக, எல்லையில் உள்ள பான்காங் சோ, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில், நம் வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில், சமீப காலமாக, சீன ராணுவம், புதிய முகாம்களை அமைப்பது, பதுங்கு குழிகளை அமைப்பது, கனரக ஆயுதங்களை குவிப்பது ஆகிய வேலைகளில் ஈடுபட்டது. இதையடுத்து, நம் ராணுவமும், அதிரடி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.




latest tamil news


இது தொடர்பாக டுவிட்டரில் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது : எல்லை பிரச்னை தொடர்பாக மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளதை, இந்தியா, சீனாவிடம் தெரிவித்துள்ளோம் எனக்கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaran vaidyanathan - Coimbatore,இந்தியா
28-மே-202011:07:34 IST Report Abuse
sankaran vaidyanathan தற்போது லடாக் எல்லையில் இந்தியாவும் சீனாவும் அவரவர் நிலைகளில் படைகளை குவித்து வருகின்றனர், இதுநாள் வரை கெத்தாக வலம் வந்த சீனா, நேற்று கூட சீன பாராளுமன்றத்தில் சீன அதிபரின் மோசமான போருக்கு தயாராக வேண்டி ராணுவத்தினருக்கான அழைப்பும் விடுத்தது சீனா, மிரட்டிய சீனாவை விரட்டிய இந்தியா என்று செய்தி போடுகிறார்கள் தற்போதைய இந்திய வெளியுறவு கொள்கையால், உலகம் முழுவதும் இந்திய ஆதரவு நிலைப்பாட்டில் தான் உள்ளது என்கிறார்கள். ஆனால் இந்தியாவை விட்டு விலகி சீனாவுடன் நெருக்கம் காட்டும் நேபாளம் - மேற்கே பாகிஸ்தான். கிழக்கே மியன்மார் தெற்கே சீனா பிடியில் உள்ள இலங்கை இவைகளினால் உண்டாக்கப் போகும் இன்னல்களை பார்க்கவில்லை . ஒரே நேரத்தில் பல இடங்களில் போர் ஏற்பட்டால் சிந்திக்க முடியுமா என்பதை உணரவில்லை.அதன் அபாயங்களை உணராமல் துதி படுகிறார்கள் சீனாவின் ஏற்றுமதி சந்தையில் 80'/. இந்தியாவை மையப்படுத்தியே உள்ளது தடை செய்தால் சீன பொருட்களால் பயன் பெரும் இந்தியர்கள் அவதிபடுவது தான் மிஞ்சும் .கணனி முதல் கை பேசி வரை அவர்களின் பொருள்கள் தான் எதிரி நம்மை தாக்க நினைத்தாலே அவனை தவிடுபொடியாக்கும் தேசம், என்கிற உணர்ச்சி யதார்த்தத்தை புரிந்திட இயலாது செய்யும் முழக்கம் வாய் சொல் வீரம் தான்
Rate this:
Cancel
ராபீக் (லாயம்) - Jubail,சவுதி அரேபியா
28-மே-202010:22:07 IST Report Abuse
ராபீக் (லாயம்) மத்தியஸ்தம் என்பது ஆயுதம் விற்க திட்டம் ..... வேற வேல இருந்தா பாருங்க சார் .........
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
27-மே-202022:32:49 IST Report Abuse
Vena Suna முதலில் இவன் அவன் மக்களை காப்பாற்றட்டும்...கொரோனாவிலிருந்து
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X