பொது செய்தி

தமிழ்நாடு

மே 29ல் கலெக்டர்களுடன் முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
lockdown, Cm, CM EPS, EPS, cm edapadi palanisamy, cm palanisamy,  collectors, corona, coronavirus, covid-19, ஊரடங்கு, கலெக்டர்கள், இபிஎஸ், முதல்வர் இபிஎஸ், முதல்வர் பழனிசாமி, முதல்வர் எடப்பாடிபழனிசாமி, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, கலெக்டர்கள், ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் நாளை மறுநாள்( மே 29) வீடியோ கான்பரன்சிங் முறையில் முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்த உள்ளார். மே 31 அன்றுடன் ஊரடங்கு முடியும் சூழ்நிலையில் ஆலோசனை நடக்க உள்ளது.

கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 31 அன்றுடன் நிறைவு பெறுகிறது. 4ம் கட்ட ஊரடங்கில் பல கட்ட தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இருப்பினும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கை தளர்த்துவதா அல்லது நீட்டிப்பதா என்பது குறித்து நேற்று( மே 26) மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து வெளியிடப்படவில்லை.


latest tamil news



இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் இ.பி.எஸ்., நாளை மறுநாள்( மே 29) மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். மே 31 அன்றுடன் ஊரடங்கு முடியும் சூழ்நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
27-மே-202019:29:40 IST Report Abuse
Bhaskaran எப்படியும் சென்னைக்கு இப்போதைக்கு விடிவு கிடையாது என்பது மட்டும் உறுதி
Rate this:
Cancel
27-மே-202019:11:57 IST Report Abuse
ஆப்பு மத்திய அரசு வலியுறுத்தும் வரை இப்பிடி ஆலோசனை நடத்தலாம். அப்புறம் அவிங்க சொன்னதுக்கு கூட்டி குறைச்சு நம்ம ஊரடங்கை அறிவிக்கலாம். ஏன்னா, நிதியும் சரியா குடுக்கமாட்டாங்க... கொரோனா பாதிப்பு அதிகமானா குத்தமும் சொல்ல ஆய்வுக்குழுவை அனுப்புவாங்க.
Rate this:
Cancel
Sami Sam - chidambaram ,இந்தியா
27-மே-202018:39:51 IST Report Abuse
Sami Sam கோயம்பேடு சம்பவம் போல மற்றொன்று நடக்காமல் இருந்தால் சரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X