பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 18,545 பேருக்கு கொரோனா: இதுவரை பலி 133

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Tamilnadu, CoronaCases, DeathToll, Discharge, CoronaUpdates, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, பலி, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 27) 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 18,545 ஆகவும், பலி எண்ணிக்கை 133 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 678 பேர் தமிழகத்திலும், 138 பேர் மஹாராஷ்டிராவில் இருந்தும், ஒருவர் கேரளாவில் இருந்தும் வந்தவர்கள். இதனால் மொத்த பாதிப்பு 18,545 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் 4 பேரும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டில் தலா ஒருவரும் என 6 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 133 ஆக உள்ளது. 567 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 9,909 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news


தற்போது 8,500 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 70 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று மட்டும் 11,231 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய பாதிப்புகளில் ஆண்கள் 508 பேர், பெண்கள் 309 பேர். மொத்த பாதிப்பில் 12 வயதுக்குள் உள்ளவர்கள் 1,122 பேர், 13 முதல் 60 வயதுக்குள் உள்ளவர்கள் 15,796 பேர், 60 வயதை கடந்தவர்கள் 1,627 பேர் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
28-மே-202015:43:26 IST Report Abuse
Natarajan Ramanathan ஊரடங்கை ஒரு பயலும் மதிப்பதேயில்லை இப்போதுகூட முக கவசம் அணியாமலும் சிகரெட் பிடித்தபடியும் பலர் செல்கிறார்கள் இருசக்கர வாகனத்தில் நேற்றுகூட நான்கு பேர் செல்வதை பார்த்தேன். சென்னையில் கொரானா குறைய வாய்ப்பே இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X