பொது செய்தி

இந்தியா

சிறப்பு ரயிலில் மும்பையிலிருந்து தமிழகம் புறப்பட்ட 1,600 தொழிலாளர்கள்

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மும்பை: மும்பையிலிருந்து தமிழகத்திற்கு சிறப்பு ரயில் மூலம் 1,600 தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.



latest tamil news



கொரோனா பரவலால் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அங்கு தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஊரடங்கின் காரணமாக வேலை கிடைக்காமல் வருமானத்தை இழந்து தவித்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 1.600 தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் மும்பையிலிருந்து புறப்பட்டனர். இந்த ரயில் திருநெல்வேலி வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல நாட்களாக தங்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் இவர்கள் தவித்து வந்தனர்.


latest tamil news



மஹாராஷ்டிரா தமிழ் சங்க தலைவர் எஸ்.அண்ணாமலை, தமிழர்களுக்காக இந்த சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்ய உதவியாக இருந்த மும்பை தெற்கு மத்திய தொகுதி எம்.பி., ராகுல் ஷேவேலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மும்பை புறநகர்ப்பகுதியில் வசித்து வந்த அவர்கள் ரயிலைப் பிடிக்க வசதியாக ரயில் புறப்படும் நேரத்தை சற்று தாமதமாக மாற்றி அமைத்ததற்காகவும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
27-மே-202020:58:32 IST Report Abuse
mohan பாராட்ட படவேண்டிய விஷயம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X