பொது செய்தி

இந்தியா

ஊரடங்கு விதியால் 30 ஆயிரம் திருமணங்கள் ரத்து

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

காந்திநகர்: ஊரடங்கு விதிகள் காரணமாக குஜராத் மாநிலத்தில் 30 ஆயிரம் திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.



latest tamil news



இது குறித்து குஜராத் மாநில ஹோட்டல் மற்றும் உணவக சங்கத்தின் செய்திதொடர்பாளர் அபிஜித் தேஷ்முக் தெரிவித்து இருப்பதாவது:

மாநிலத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் தான் அதிகளவில் திருமணம் நடைபெறும் மாதமாக இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகள் காரணமாக சுமார் 30 ஆ்யிரம் திருமணங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் ஒரு சில தம்பதிகள் எட்டு முதல் பத்து பேர் கொண்ட நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்கின்றனர்.

பெரும்பாலோனார் வரும் டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி வரை காத்திருப்பது என முடிவு செய்துள்ளனர். காத்திருக்க முடியாதவர்கள் சில குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையில் வீட்டிலேயே திருமணம் செய்து கொள்கின்றனர்.


latest tamil news



மேலும் முகமூடி அணிந்த திருமண ஆல்பத்தை பார்க்க யார் தான் விரும்புவார்கள். வெறும் 50 உறவினர்களுக்காக உணவு ஏற்பாடு செய்வதும் சாத்தியமில்லாது . அகையால் மக்கள் தங்கள் திருமணங்களை நிறுத்தி விட்டு இயல்பு நிலை வரும் வரையில் காத்திருக்க முடிவு செய்துள்ளனர்.

ஒரு சிலர் தற்காலிக ஏற்பாடாக பதிவு திருமணத்தை நடத்துவது பின்னர் முறையான திருமண விழாவை நடத்துவது என முடிவு செய்துள்ளனர். என உணவு தயார் செய்பவரான அமல் காந்தி என்பவர் கூறினார்


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Hariharan - Hyderabad,இந்தியா
28-மே-202008:37:09 IST Report Abuse
R Hariharan In Tamil nadu so many marriages postponsed Dec or Jan.21.
Rate this:
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
28-மே-202005:57:13 IST Report Abuse
Nalam Virumbi ஜனத் தொகை பெருக்கம் லாக் டௌன்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
28-மே-202000:37:00 IST Report Abuse
தல புராணம் இயற்கையே கொடுத்த ஒரு நல்ல வாய்ப்பு.. தப்பிச்சோமுன்னு போயிடுங்க.. புரியாமே போயி மாட்டிக்காதீங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X