சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டியை மிரட்ட வந்த கொடூர வெட்டுக்கிளிகள்

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement

ஊட்டி:கிழக்கு ஆப்ரிக்காவின் பாலைவனப்பகுதியிலிருந்து கிளம்பி கண்டம் விட்டு கண்டம் தாக்கும் கொடூர வெட்டுக்கிளிகள் தற்போது ஊட்டி காந்தள் பகுதியில் காணப்பட்டதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.



latest tamil news



ஆப்பிரிக்க, அரேபிய நாடுகளைத் தாக்கிய வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தாண்டு இந்திய மாநிலங்கள் சிலவற்றிலும் கடும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வடமேற்கு மாநிலங்களைத் தாக்கிய இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்தைத் தாக்காது என்று தமிழக வேளாண் துறை சொல்லியிருந்த நிலையில், கேரளா மாநிலம் வயநாடு பகுதிவழியாக வந்து ஊட்டியில் காணப்பட்டதால் அதை பாட்டிலில் அடைத்து அதை காட்டிய ஒருவர் அது குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அவர்களிடம் தெரிவித்ததை அடுத்து அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.


latest tamil news



ஆப்ரிக்க நாடுகளான, கென்யா, எத்தியோப்பியா, சோமாலியாவிலிருந்து வந்த இந்த வெட்டுக்கிளியின் பெயர்' ஹீலிபேரா 'என அழைக்கப்படுகின்றன. அங்கிருந்து புறப்பட்டு வந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் சென்று அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைந்து மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உ.பி., என படையெடுத்து விவசாயிகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தின. இந்நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் கேரளாவின் வயநாட்டிலும் தமிழ்நாட்டின் ஊட்டி காந்தள் பகுதியில் காணப்படுகிறது. இந்த வெட்டுக்கிளிகள் ஒரு சதுர கி.மீட்டருக்கு 8 கோடி வரை படையெடுக்கும் தன்மை கொண்டதால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sri - trichy,இந்தியா
28-மே-202016:29:54 IST Report Abuse
sri வெட்டுக்கிளி வறுவல் , பொரியல் , வகையறா பண்ணி சாப்பிடவேண்டியதுதான் .
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
28-மே-202012:55:28 IST Report Abuse
A.George Alphonse உலகம் முடியும் போது இது போன்ற விஷ ஜந்துக்கள் வருவது நியாமமே.
Rate this:
Cancel
Pandianpillai Pandi - chennai,இந்தியா
28-மே-202010:40:35 IST Report Abuse
Pandianpillai Pandi இதற்க்கு நிச்சயம் நமது முன்னோர்கள் இயற்கையான ஒரு தீர்வினை கண்டிருப்பார்கள். அதை கண்டுபிடிப்பதுதான் நமது வேலையாக இருக்கவேண்டும். அரசை நம்பி சும்மா இருந்துவிடாதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X